ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி.
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது. நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த சிறுதானியம் மலச்சிக்கலை நீக்குவதோடு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சக்கரையின் அளவை இரத்தத்தில் உடனடியாக ஏறாதவாறு பாதுகக்கவும் செய்கிறது.
சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி.
நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் பல பல சத்துக்களும், பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சத்தானது சாமை கூட்டாஞ்சோறு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவு. காய்கறிகள், பருப்பு என அனைத்தும் ஒன்றாக கலந்த சிறந்த உணவு.
தேவையான பொருட்கள்
- 2 கப் சாமை அரிசி
- ¼ கப் துவரம் பருப்பு
- ¼ கப் கத்தரிக்காய்
- 1 முருங்கைக்காய்
- 1 மாங்காய் ((சிறியது))
- 2 தக்காளி
- 6 சின்ன வெங்காயம்
- 3 பச்சைமிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு நெல்லிக்காய் அளவு புளி
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 சில் தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பல் பூண்டு
- சிறிது கடுகு
- சிறிது உளுந்து
செய்முறை
சாமை அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பின் துவரம் பருப்பை வேகவிடவும்.
துவரம் பருப்பு அரைப்பதம் வெந்தபின் சாமை அரிசி, காய்கறிகள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு ஒரு மண்பானையில் வேக விடவும்.
இந்த கலவை முக்கால் பதம் வெந்தவுடன் புளியைக் கரைத்து விடவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சில், பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து சேர்க்கவும்.
இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சாமை கூட்டாஞ்சோறு தயார்.
சாமை கூட்டாஞ்சோறு
தேவையான பொருட்கள்
- 2 கப் சாமை அரிசி
- ¼ கப் துவரம் பருப்பு
- ¼ கப் கத்தரிக்காய்
- 1 முருங்கைக்காய்
- 1 மாங்காய் ((சிறியது))
- 2 தக்காளி
- 6 சின்ன வெங்காயம்
- 3 பச்சைமிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு நெல்லிக்காய் அளவு புளி
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 சில் தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பல் பூண்டு
- சிறிது கடுகு
- சிறிது உளுந்து
செய்முறை
- சாமை அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- பின் துவரம் பருப்பை வேகவிடவும்.
- துவரம் பருப்பு அரைப்பதம் வெந்தபின் சாமை அரிசி, காய்கறிகள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு ஒரு மண்பானையில் வேக விடவும்.
- இந்த கலவை முக்கால் பதம் வெந்தவுடன் புளியைக் கரைத்து விடவும்.
- வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் சில், பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
- தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து சேர்க்கவும்.
- இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- சுவையான சாமை கூட்டாஞ்சோறு தயார்.