சத்துக்கள் நிறைந்த சிறந்த சுவையான தோசை இந்த சாமை பாசிப்பருப்பு தோசை. சாமையும், பாசிப்பருப்பும் ஊறியதும் அரைத்து உடனடியாக சுடலாம். மாவு புளிக்கத் தேவையில்லை, சாமை புழுங்கல் அல்லது பச்சை அரிசி பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்
- 3 கப் சாமை புழுங்கல் அரிசி / சாமை அரிசி
- 1 கப் பாசிப்பருப்பு
- சிறு துண்டு இஞ்சி
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் மிளகு
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
- சாமை புழுங்கல் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு இரண்டு மூன்று முறை கழுவி அவற்றை சேர்த்து 2 மணி நேரம் ஊறவிடவும்.
- நன்கு ஊறியபின் அவற்றுடன் இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து மாவாக அரைக்கவும்.
- பின் உப்புச் சேர்த்துக் கலக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் விருப்பபட்டால் சேர்க்கவும்.
- சூடான தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, மூடி போட்டு, வேகவிட்டு சுடவும்.
- சுவையான சாமை அரிசி தோசை தயார்.
- வெங்காய சட்னி, இஞ்சி சட்னியுடன் பரிமாறவும்.

சாமை பாசிப்பருப்பு தோசை
சத்துக்கள் நிறைந்த சிறந்த சுவையான தோசை. சாமையும், பாசிப்பருப்பும் ஊறியதும் அரைத்து உடனடியாக சுடலாம். மாவு புளிக்கத் தேவையில்லை, சாமை புழுங்கல் அல்லது பச்சை அரிசி பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்றது.