ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் வாயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, சோம்பல், உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை அரிசி.
பெண்களுக்கு மட்டுமில்லாது ஆண்களின் விந்து எண்ணிக்கையையும் அதிகரிக்க சாமை அரிசி உணவுகள் துணைசெய்கிறது. நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த சிறுதானியம் மலச்சிக்கலை நீக்குவதோடு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சக்கரையின் அளவை இரத்தத்தில் உடனடியாக ஏறாதவாறு பாதுகக்கவும் செய்கிறது.
சாமை அரிசி பயன்கள், நன்மைகளை தெரிந்துக்கொள்ள – சாமை அரிசி.
நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் பல பல சத்துக்களும், பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சத்தானது சாமை வெற்றிலை சாதம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவு.
விரைவாகவும் எளிமையாகவும் தயாரிக்கக்கூடிய இந்த சாமை வெற்றிலை சாதம் சீராக ஜீரணத்திற்கு நல்லது. வாரம் ஒருமுறை இதனை உட்கொள்ள உடல் வலிமைபெறும்.
தேவையான பொருட்கள்
- ½ கப் சாமை அரிசி
- 2 – 3 வெற்றிலை
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பல் பூண்டு
- 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- சிறிது கடுகு
- சிறிது உளுந்து
- 1 வர மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
- முதலில் சாமை அரிசியை இருபது நிமிடம் ஊறவைத்து பின் அதனை இரண்டு கப் தண்ணீரில் வேகவிட்டு வெந்ததும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
- வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை உரலில் வைத்து மைய இடித்துக்கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து அதில் இடித்து வைத்திருக்கும் வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- பின் அதில் எலுமிச்சை சாறையும், சாமை சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
- வெற்றிலை சாமை சாதம் தயார்.
சாமை வெற்றிலை சாதம்