காய்களும் அதன் மருத்துவப் பயன்களும்

முருங்கைக்காய்

வாதம், பித்தம், கபம் நீக்கும். முருங்கை கீரை ஜுரம் நீக்கும், தொண்டைகட்டு நீக்கும். முருங்கை வேர் பட்டை வாத வீக்கங்களுக்கு நல்லது.

சுரைக்காய்

சுரைக்காய் சமைத்துண்டால் உடல் வீக்கம் குறையும். சிறுநீர் அதிகமாகம், சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது.

வாழைக்காய்

வாந்தி, பித்தம், உஷ்ணம், இருமல் குணமாகும். ரத்தவிருத்தி, பலம் உண்டாகும். ஆனால் வாய்வு உண்டு.

வாழைக்கச்சல் (வாழையின் இளங்காய்)

வாழைக்காயின் இளங்காயை கூட்டு செய்து உண்டால் பெரும்பாடு, ரத்த மூலம் குணமாகும். ஜீரணசக்தி மிகும். குடல் வலுவடையும்.

வாழைத்தண்டு

சிறுநீரகங்கள் சுத்தமாகின்றன.

வாழைப்பழம்

மிகவும் சத்துள்ளது. மூளைப்பழம் என குறிப்பிடுவர்.

கோவைக்காய்

இருமல், ஈளை நோய் தீரும், சர்க்கரை வியாதிக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி மிகுந்தது.

உருளைக்கிழங்கு

இது உடலுக்கு பலம் கொடுக்கும்m ஆனால் கேஸ்ட்ரிக், அல்சர் இருப்பவர்கள் உண்ணக்கூடாது. தீக்காயங்களுக்கு இதை தடவ குணமாகும். தோலில் ஏற்படும் கரும்படைகளுக்கு உருளைக்கிழங்கு துண்டுகளை தேய்த்துவர தோல் நோய் நாளடைவில் குணமாகும். இந்நோய் Dry Exima எனப்படும்

முள்ளங்கி

வயிறு சிறுநீரகம் வலுவடையும். எதிர்ப்புச் சக்தி பெருகும்.

சேனைக்கிழங்கு

சுண்ணாம்பு சத்து மிகுந்தது. கால்சியம், இரும்புச்சத்து மிகுந்தது. காருங்கரணை, காராக்கரணை, புளிக்கரணை என பல உண்டு. இதில் காராக்கரணையே மூலத்திற்கு சிறந்தது.

முட்டைகோஸ்

வைட்டமின் ஏ நிறைந்தது. மாவுச்சத்து வியாதிக்கும், அல்சருக்கும் மலச்சிக்கலுக்கும் நல்லது.

பூக்கோசு (காலிபிளவர்)

புரோட்டின் அடங்கியது, வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது.

பீன்ஸ்

புரோட்டீன், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் இ அலர்ஜி அகற்றும்.

கொத்தவரை

புரோட்டின் தாது உப்புகள் அடங்கியது. (அடிக்கடி உண்டால் பித்தவாயு, மாந்த வலி உண்டாகும்)

பூசணி

கல்யாண பூசணி, சாம்பல் பூசணி, சளிச்சூடு குறைக்கும். தேகம் வலுவடையும், காச நோய்க்கு நல்லது.

பரங்கி

நல்ல பசி உண்டாக்கும். அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல.

எலுமிச்சை

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

வெண்டைக்காய்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்டது. உட்சூடு, உஷ்ண இருமல் குணமாகும், உடலுக்கு வலிமை தரும்.

புடலங்காய்

ஏ உயிர் சத்தும், புரதம், தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. தேக வெப்பம் குறையும், உடலுக்கு வலுவைத் தரும்.

கத்தரிக்காய்

முற்றினகாய் வயிற்றுக் கோளாறு, தோல்நோய் உண்டுபண்ணும். பிஞ்சு உடம்புக்கு நல்லது. தயாமின், ரைபோபிளேவின் கொண்டது.

பாகற்காய்

சர்க்கரை வியாதிக்கு நல்லது. வாயுவைக் கண்டிக்கும். கிருமிகளைக் கொல்லும், குடலுக்கு வலிமை தரும்.

(3 votes)