எலுமிச்சையில் அதன் சாறை விட அதிக சத்துக்கள் கொண்டது எலுமிச்சையின் தோல். நமது முன்னோர்கள் இந்த எலுமிச்சையின் தோலை பயன்படுத்தி பல பல உணவுகளையும், சருமம், கூந்தலுக்கு தேவையான அழகுப் பொருட்களையும் தயாரித்து பயன்படுத்தினர். அந்த வரிசையில் எலுமிச்சையின் தோலில் சத்தான சுவையான ஒரு ஊறுகாய் செய்து மதிய உணவுடன் உட்கொள்ள உணவு சுவைப்பதுடன் ஜீரண சுரப்பிகள், செரிமான நீர் எளிமையாக சுரக்கும். உணவு எளிதில் சீராக செரிமானமாகும்.
தேவையான பொருட்கள்
- 10 எலுமிச்சை தோல்
- கல் உப்பு
- 4 – 6 பச்சை மிளகாய்
- கடுகு
- 5 – 6 நல்லெண்ணெய்
- பெருங்காயம்
- வெல்லம்
செய்முறை
- முதலில் பத்து எலுமிச்சை தோலை எடுத்துக்கொண்டு அதனை தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு ஒரு வாரம் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாரத்திற்குப் பின் தேவையான அளவு பச்சை மிளகாயுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஓரளவிற்கு கொரகொரப்பாகவும் இருக்கலாம்.
- பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு அரைத்த விழுது, சிறிதளவு பெருங்காயம், சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும்.
- எண்ணெய் முழுவதையும் இந்த கலவை உறிஞ்சி விடும்.
- சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார்.
- இதனை ஓரிரு நாளில் பயன்படுத்துவது நல்லது. அதிக நாட்கள் வைத்திருக்க இந்த கலவையை எண்ணெயில் சற்று சுருள வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை தோல் ஊறுகாய்
எலுமிச்சையில் அதன் சாறை விட அதிக சத்துக்கள் கொண்டது எலுமிச்சையின் தோல். நமது முன்னோர்கள் இந்த எலுமிச்சையின் தோலை பயன்படுத்தி பல பல உணவுகளையும், சருமம், கூந்தலுக்கு தேவையான அழகுப் பொருட்களையும் தயாரித்து பயன்படுத்தினர். அந்த வரிசையில் எலுமிச்சையின் தோலில் சத்தான சுவையான ஒரு ஊறுகாய் செய்து மதிய உணவுடன் உட்கொள்ள உணவு சுவைப்பதுடன் ஜீரண சுரப்பிகள், செரிமான நீர் எளிமையாக சுரக்கும். உணவு எளிதில் சீராக செரிமானமாகும்.
தேவையான பொருட்கள்
- 10 எலுமிச்சை தோல்
- கல் உப்பு
- 4 – 6 பச்சை மிளகாய்
- கடுகு
- 5 – 6 நல்லெண்ணெய்
- பெருங்காயம்
- வெல்லம்
செய்முறை
- முதலில் பத்து எலுமிச்சை தோலை எடுத்துக்கொண்டு அதனை தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு ஒரு வாரம் வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- ஒரு வாரத்திற்குப் பின் தேவையான அளவு பச்சை மிளகாயுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும். ஓரளவிற்கு கொரகொரப்பாகவும் இருக்கலாம்.
- பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு அரைத்த விழுது, சிறிதளவு பெருங்காயம், சிறிதளவு வெல்லம் சேர்த்து கிளறவும்.