இன்றிருக்கும் பல நோய்கள், தொந்தரவுகள், சங்கடங்கள், மன அழுத்தம் உட்பட பல வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்து சிரிப்பு. “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்“.
தினமும் கொஞ்ச நேரம் மனம் விட்டு, வாய் விட்டுச் சிரித்து வரும் பழக்கத்தை நாம் மேற்கொண்டால், டாக்டர்களை அணுக வேண்டிய அவசியமே ஏற்படாது. மனதை மட்டுமின்றி உடலையும் சீராக்குவது சிரிப்பு!
கொடிய நோய்களுக்கு
மிக கொடிய நோயிலிருந்தும் நம்மை நாம் பாதுகாக்க சிறந்த ஆயுதம் மற்றும் கவசம் சிரிப்பு. எப்பேர்பட்ட நோயையும் சிரிப்பு குறைக்கும் ஆற்றல் கொண்டது. 10 நிமிடம் வயிறு குலுங்கச் சிரித்து அட்ரினல் சுரப்பிகளை ஊக்குவித்து, உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக் கொண்டால் போதும் உடலிளிருக்கும் நோய் பறந்தோடும்.
உயிர் கொல்லி நோய்க்கு
உயிர் கொல்லி நோய்களில் இருந்து பலர் சிரிப்பு மருத்துவத்தின் மூலம் வெளியேறி அந்நோயிலிருந்து பூரண குணமான சான்றுகளும் ஆய்வுகளும் மிக அதிகமாகவே உள்ளது.
மலச்சிக்கல் / குடல் நோய்க்கு
சிரித்துக் கொண்டே சாப்பிடும்போது செரிமானம் சிறக்கிறது. குடல் ஊக்குவிக்கப்படுகிறது. நிறைய சிரிப்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.
இதய நோய்க்கு
சிரிப்பு இரத்தத்திலுள்ள கொழுப்புச்சத்தின் அளவைக் குறைத்து, இதய நோய்க்கு மருந்தாக விளங்குகிறது என்பது அண்மை கண்டுபிடிப்பு. இரத்த அழுத்த நோய்க்கும் மாமருந்து சிரிப்பு.
சிரிப்பதால் என்ன நடக்கிறது
மூளையின் அடிப்பாகத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியைச் சிரிப்பு தூண்டுகிறது. அதனால் அதில் வளர்ச்சி உயிரணுக்கள் சரியான அளவு ஏற்படுகின்றன. மூளையில் நுட்பமான இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை விரைவுப்படுத்தி மூளை, தெளிவு பெறுகிறது.
சிரிக்கும் பொழுது 34 தசைகள் இயங்குகிறது. அதுவே புன்னகைக்கும் போதோ 13 தசைகள் மட்டுமே இயங்குகின்றன. சிரிக்கும் பொழுது தசைகளின் விரைப்பும் தளர்கிறது.
‘சிரித்துச் சிரித்துப் பெருத்துப் போ’ என்பது உண்மையான பழமொழி.