சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.
நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உடல் செயல்பாடுகளின் ஊக்கியாகவும் அவை செயல்படுகின்றன. பாஸ்பரஸ் இந்த குதிரைவாலியில் உள்ளது.
அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால் வளரும் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வளம் பெறுகின்றன.
அது மட்டுமில்லாது குதிரைவாலி நார்சத்து, இரும்பு சத்து, புரதம் மிகுந்த உணவு தானியமாகவும் திகழ்கிறது. இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் கொண்ட குதிரைவாலியை வைத்து எவ்வாறு சத்தான கீரை புலாவ் செய்வது என்று பார்போம். எளிதில் ஜீரணமாகும் இந்த குதிரைவாலி கீரை புலாவ் மதிய உணவிற்கு சிறந்தது.
மேலும் குதிரைவாலியைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – குதிரைவாலி.
மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- 1 கப் நறுக்கிய தக்காளி
- ½ கப் நறுக்கிய வெந்தயக் கீரை
- ½ கப் நறுக்கிய கொத்தமல்லி
- ½ கப் புதினா
- ½ கப் வெங்காயம்
- ½ கப் தேங்காய்ப்பால்
- 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- ½ ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- 1 ஸ்பூன் நாட்டு பசு வெண்ணெய்
- உப்பு
செய்முறை
- குதிரைவாலி அரிசியை 2௦ நிமிடம் ஊறவைத்துகொள்ளவும்.
- வாணலியில் வெண்ணெய் உருகியதும், ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
- இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் குதிரைவாலி அரிசியையும் போட்டு வதக்கி 2 கப் தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி சிறுதீயில் 10 நிமிடம் மூடிவைத்து வேக விடவும்.
- வெந்தயக் கீரை குதிரைவாலி புலாவ் தயார்.
- இதனை குருமா அல்லது கத்திரிக்காய் மசாலாவுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
குதிரைவாலி வெந்தயக்கீரை புலாவ்