குதிரைவாலி வெண்பொங்கல்

குதிரையின் வாலைப்போல இருக்கும் இந்த சிறு தனியத்தை Barnyard Millet என்றும் இதனின் உமியை நீகியப்பின் குதிரைவாலி அரிசி என்றும் அழைக்கிறோம். சாதம், இனிப்பு காரம் முதல் இட்லி தோசை வரை அனைத்து உணவுகளையும் இந்த குதிரைவாலியில் தயாரிக்கலாம். 

ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலுவலகம், தொழில் என்று சுழன்று கொண்டிருக்கும் இந்த அவசர யுகத்தில் எளிதாக இந்த உணவுகளை தயாரித்து நம் குழந்தைகளை அசத்தலாம்.

சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.  நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 

சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். 

Barnyard-millet-in-tamil, Kuthiraivali seeds, barnyard millet seeds, kuthiraivali boiled, kuthiraivali rice, Millet Seeds, Millet Rice, Healthy Millets

மேலும் குதிரைவாலியைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – குதிரைவாலி.

மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • ¼ கப் பாசிப் பருப்பு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • சிறிது இஞ்சி
  • சிறிது பெருங்காயம்
  • 2-3 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் வறுத்த முந்திரிப் பருப்பு
  • சிறிது கறிவேப்பிலை
  • தேவையான அளவு  உப்பு

செய்முறை

  • குதிரைவாலி அரிசியையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
  • ஒரு மண் சட்டியில் 5 கப் தண்ணீர் சேர்த்து முதலில் பாசிப்பருப்பை ஐந்து நிமிடம் வேக விடவும்.
  • பின் அதனுடன் ஊறவைத்த குதிரைவாலி அரிசியையும் சேர்த்து அதனுடன் சிறிது இஞ்சி விழுது, சிறிது மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பத்து பதினைந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
  • நன்கு வெந்தபின் தேவையான உப்பு சேர்த்துகொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய் சேர்த்து மிளகு, சீரகம், சிறிது பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெந்த குதிரைவாலி பொங்கலுடன் சேர்க்கவும்.
  • அதனுடன் வறுத்த முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
  • சூடான சுவையான குதிரைவாலி பொங்கல் தயார்.
  • இதன் சுவை மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.

குதிரைவாலி வெண்பொங்கல்

சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.  நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 
சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். 
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 50 minutes

(1 vote)