சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இதுவே. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் இந்த குதிரைவாலியின் பயன்கள், நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துக்கொள்ள – குதிரைவாலி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. மதிய உணவிற்கு சிறந்தது. காய்கறி, சிறுதானியம் என அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- சிறிது புதினா இலைகள்
- 1 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் வெங்காயம் (பெரியது)
- 2 ஸ்பூன் கேரட்
- 2 ஸ்பூன் பீன்ஸ்
- 2 ஸ்பூன் குடைமிளகாய்
- 2 ஸ்பூன் பச்சைப்பட்டாணி
- 2 ஸ்பூன் நாட்டு மக்கா சோளம்
- சிறிது இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்
- ஏலக்காய், பட்டை, கிராம்பு
- வெண்ணை
- உப்பு
செய்முறை
காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் வெண்ணைய் போட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்கி காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து தேங்காய்ப் பால் நீருடன் 2 கப் ஊற்றி வேகவிடவும்.
இந்தக் கலவை கொதித்ததும் குதிரைவாலி அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். குதிரைவாலி காய்கறி சாதம் தயார்.
குதிரைவாலி காய்கறி சாதம்
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- சிறிது புதினா இலைகள்
- 1 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் வெங்காயம் ((பெரியது))
- 2 ஸ்பூன் கேரட்
- 2 ஸ்பூன் பீன்ஸ்
- 2 ஸ்பூன் குடைமிளகாய்
- 2 ஸ்பூன் பச்சைப்பட்டாணி
- 2 ஸ்பூன் நாட்டு மக்கா சோளம்
- சிறிது இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்
- ஏலக்காய், பட்டை, கிராம்பு
- வெண்ணை
- உப்பு
செய்முறை
- காய்கறிகளைக் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சி, பூண்டை இடித்துக் கொள்ளவும்.
- பிறகு வாணலியில் வெண்ணைய் போட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் 2 கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, புதினா போட்டு வதக்கி காய்கறிகள், உப்பு, மஞ்சள் சேர்த்து தேங்காய்ப் பால் நீருடன் 2 கப் ஊற்றி வேகவிடவும்.
- இந்தக் கலவை கொதித்ததும் குதிரைவாலி அரிசியை போட்டு வெந்ததும் இறக்கவும். குதிரைவாலி காய்கறி சாதம் தயார்.