சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இதுவே. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
குதிரைவாலியில் உள்ள பாஸ்பரஸ் நமது உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. செல் வளர்சிதை மாற்றத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது.
மேலும் இந்த குதிரைவாலியின் பயன்கள், நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துக்கொள்ள – குதிரைவாலி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு.
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி
- 1 கப் கார் அரிசி
- ¼ கப் உளுந்து
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 2 கப் கருப்பட்டி
- ½ கப் இளநீர்
செய்முறை
முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கிவைத்துப் புளிக்கவைக்க வேண்டும்.
புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி-கருப்பட்டி ஆப்பம் தயார்.
குதிரைவாலி ஆப்பம்
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி
- 1 கப் கார் அரிசி
- ¼ கப் உளுந்து
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 2 கப் கருப்பட்டி
- ½ கப் இளநீர்
செய்முறை
- முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கிவைத்துப் புளிக்கவைக்க வேண்டும்.
- புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
- கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.
- ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
- ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
- சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி-கருப்பட்டி ஆப்பம் தயார்.