நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து கொண்ட நம் பாரம்பரிய தானியம்.
சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இதுவே. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
இட்லி, தோசை, உப்புமா, கூழ், முறுக்கு, சாதம் என பலவற்றை தயாரிக்க சிறந்தது என்றாலும் குதிரைவாலி இனிப்பு பொங்கல், மிளகு பொங்கல் மற்றும் தயிர் சாதத்தின் சுவை ஈடு இணையற்றது. அதுவும் இவற்றை மண்பானையில் சமைக்க, சொல்ல வார்த்தைகளே இல்லை.
இந்த பொங்கலுக்கு புதியவகையில் இந்த குதிரைவாலி அரிசி இனிப்பு பொங்கலை செய்து பலரின் அன்பை பெறுவோம்.
குதிரைவாலியின் பயன்கள் மற்றும் நன்மையை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் – குதிரைவாலி
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- ¼ கப் பாசி பருப்பு
- 1 கப் நாட்டு சக்கரை
- 4 ஏலக்காய்
- 1 கப் நாட்டுப் பசும் பால்
- ½ கப் நாட்டு பசு நெய்
- 10 முந்திரி
- 10 உலர்ந்த திராட்சை
செய்முறை
- மண்பாத்திரத்தில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
- உடன் குதிரைவாலி அரிசியை லேசாக வறுத்து உடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- நாட்டுப் பசும் பாலை காய்ச்சி எடுத்துகொள்ளவும்.
- வேறு பாத்திரத்தில் நாட்டு சக்கரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.
- குதிரைவாலி அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய் தூள், காய்ச்சிய பசும் பால், 1 ஸ்பூன் பசு நெய் சேர்க்கவும்.
- நன்றாக குழைந்து வெந்து வரும்.
- அப்போது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கவும் .
- சுவையான குதிரைவாலி சர்க்கரை பொங்கல் ரெடி.
குதிரைவாலி இனிப்பு பொங்கல்
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து கொண்ட நம் பாரம்பரிய தானியம். சிறு தானியங்களில் அளவில் சிறிதாக மட்டுமில்லாது மென்மையான தானியமும் இதுவே. உடலை சீராக வைக்க உதவும் இந்த தானியம் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது மேலும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
⏲️ ஆயத்த நேரம்
15 mins
⏲️ சமைக்கும் நேரம்
20 mins
🍴 பரிமாறும் அளவு
4
🍲 உணவு
சிற்றுண்டி