குதிரையின் வாலைப்போல இருக்கும் இந்த சிறு தனியத்தை Barnyard Millet என்றும் இதனின் உமியை நீகியப்பின் குதிரைவாலி அரிசி என்றும் அழைக்கிறோம். சாதம், இனிப்பு காரம் முதல் இட்லி தோசை வரை அனைத்து உணவுகளையும் இந்த குதிரைவாலியில் தயாரிக்கலாம்.

ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலுவலகம், தொழில் என்று சுழன்று கொண்டிருக்கும் இந்த அவசர யுகத்தில் எளிதாக இந்த உணவுகளை தயாரித்து நம் குழந்தைகளை அசத்தலாம். கடைகளுக்கு சென்று இனிப்புகள், காரங்கள் என தேர்ந்தெடுத்து பில் போட்டு பணம் கொடுக்க காத்திருந்து வங்கி வரும் நேரத்திற்குள் இந்த பலகாரங்களை செய்தும் முடித்து விடலாம்.

மேலும் குதிரைவாலியைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடரவும் – குதிரைவாலி. For Enlgish Barnyard Millet Murukku Recipe.
மற்ற சிறுதானியங்கள் பற்றிய நன்மைகள் மற்றும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- 4 கப் குதிரைவாலி அரிசி
- 1 கப் பயத்தம்பருப்பு
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- சிறிதளவு எள்
- சிறிதளவு சீரகம்
- சிறிதளவு பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு மரசெக்கு கடலைஎண்ணெய்
செய்முறை
- குதிரைவாலி அரிசி, பயத்தம்பருப்பை மிஷினில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
- இதனுடன் எள், சீரகம், வெண்ணெய், பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.
- கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.
- பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
- குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான சிற்றுண்டி. எல்லா வயதினரும் ஏற்றதாகவும் இருக்கும்.

குதிரைவாலி ஈசி முறுக்கு