சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.
நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த மிருதுவான குதிரைவாலி சிறு தானியத்தில் கொழுக்கட்டை பாயசம் செய்து உட்கொள்ள சுவையும் ஆரோக்கியமும் கூடும். இரும்பு சத்துக்கள் கூடும்.
தேவையான பொருட்கள்
- ½ கப் குதிரைவாலி புழுங்கல் அரிசி
- ¾ கப் இயற்கை வெல்லம்
- ¼ மூடி தேங்காய்
- ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள்
- சிறிது உப்பு
செய்முறை
- குதிரைவாலி புழுங்கல் அரிசியை நன்கு கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் குதிரைவாலியை தண்ணீர் சேர்க்காமல் சிறிது உப்பு போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
- அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் 1 – 1 1/2 கப் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- அரைத்த குதிரைவாலி மாவை முறுக்கு பிழியும் குழாயில் உருண்டை அச்சு (ஒரு ஓட்டை உள்ள அச்சு) போட்டு கொதிக்கும் தண்ணீரில் மாவை பிழியவும்.
- தண்ணீரில் மாவு வெந்து கொழுக்கட்டைகளாக (உதிரி உதிரியாக) தண்ணீரின் மேல் மிதக்கும்.
- அவற்றை தண்ணீர் இன்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் பாத்திரத்தில் மீதமுள்ள தண்ணீரில் வெல்லத்தை போட்டு பாகு காய்ச்சவும்.
- அதனுடன் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்க்கவும்.
- அதில் தேங்காய்ப்பூ துருவல், ஏலக்காய்த் தூள் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
- அனைவருக்கும் ஏற்ற குதிரைவாலி பாயசம் தயார்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பாயசம்.
குதிரைவாலி கொழுக்கட்டை பாயாசம்
சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது. நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த மிருதுவான குதிரைவாலி சிறு தானியத்தில் கொழுக்கட்டை பாயசம் செய்து உட்கொள்ள சுவையும் ஆரோக்கியமும் கூடும்.