kuthiraivali-poondu-kanji-kuthiraivali-kanji-barnyard-millet-porridge-millet-kanji-recipe-in-tamil-millet-porridge-healthy-food-weight-loss-diet

குதிரைவாலி பூண்டு கஞ்சி

kuthiraivali-poondu-kanji-kuthiraivali-kanji-barnyard-millet-porridge-millet-kanji-recipe-in-tamil-millet-porridge-healthy-food-weight-loss-diet

சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. மானாவரியில் விளையும் இந்த தானியம் உணவு பாதுகாப்பு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஊட்டசத்தையும் அளிக்கிறது.  நமது உடல் கட்டமைப்பை ஊருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கனிமச்சத்தும் பாஸ்பரசும் உடலுக்கு மிக முக்கியம். உடல் செயல்பாடுகளின் ஊக்கியாகவும் அவை செயல்படுகின்றன.

அவ்வாறான பாஸ்பரஸ் இந்த குதிரைவாலியில் உள்ளது. அது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால் வளரும் குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் எலும்புகள் வளம் பெறுகின்றன.

அது மட்டுமில்லாது குதிரைவாலி நார்சத்து, இரும்பு சத்து, புரதம்  மிகுந்த உணவு தானியமாகவும் திகழ்கிறது. இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் கொண்ட குதிரைவாலியை வைத்து எவ்வாறு கஞ்சி செய்வது என்று பார்போம். எளிதில் ஜீரணமாகும் இந்த குதிரைவாலி கஞ்சி காலை உணவிற்கு சிறந்தது.

குதிரைவாலி அரிசியை அமேசான் வலைதள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள இதனை அழுத்தவும் – குதிரைவாலி அரிசி.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் குதிரைவாலி அரிசி
  • 10 பூண்டு
  • ஒரு துண்டு சுக்கு
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டம்ளர் தேங்காய்ப் பால்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • சுத்தம் செய்த கால் கப் குதிரைவாலி அரிசியை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மண்சட்டியில் வேகவிடவும்.
  • பாதி வெந்ததும் உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம் சேர்த்து வேகவிடவும்.

  • நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு, ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி இறக்கவும். 
  • சூடான அருமையான குதிரைவாலி கஞ்சி தயார்.
  • வயிற்றுப்புண், வாய்புண் ஆகியவை மறையும்.
kuthiraivali-poondu-kanji-kuthiraivali-kanji-barnyard-millet-porridge-millet-kanji-recipe-in-tamil-millet-porridge-healthy-food-weight-loss-diet

குதிரைவாலி பூண்டு கஞ்சி



சிறுதானியங்களில் மிகவும் மிருதுவான மற்றும் சிறிய தானியமாக இருப்பது நம் குதிரைவாலி. ஊட்டச்சத்துக்கள் கொண்ட குதிரைவாலியை வைத்து எவ்வாறு கஞ்சி செய்வது என்று பார்போம். எளிதில் ஜீரணமாகும் இந்த குதிரைவாலி கஞ்சி காலை உணவிற்கு சிறந்தது.


⏲️ ஆயத்த நேரம்
10 mins

⏲️ சமைக்கும் நேரம்
15 mins

🍴 பரிமாறும் அளவு
1

🍲 உணவு
கஞ்சி


தேவையான பொருட்கள்
  • ¼ கப் குதிரைவாலி அரிசி
  • 10 பூண்டு
  • ஒரு துண்டு சுக்கு
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • ¼ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டம்ளர் தேங்காய்ப் பால்
  • தேவையான அளவு உப்பு
செய்முறை
  1. சுத்தம் செய்த கால் கப் குதிரைவாலி அரிசியை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மண்சட்டியில் வேகவிடவும்.
  2. பாதி வெந்ததும் உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம் சேர்த்து வேகவிடவும்.
  3. நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு, ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
  4. சூடான அருமையான குதிரைவாலி கஞ்சி தயார்.
  5. வயிற்றுப்புண், வாய்புண் ஆகியவை மறையும்.