குதிரைவாலி ஃபுரூட் புலாவ்

சிறுதானியங்களில் நல்ல மிருதுவான தானியம் குதிரைவாலி. இந்த மிருதுவான, சுவையான சின்ன சின்ன தானியத்தில் நம் வீட்டு சின்ன சின்ன குழந்தைகளுக்கு இனிப்பு, புளிப்பு சேர்ந்த ஒரு குதிரைவாலி ஃபுரூட் புலாவ் செய்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

சிறுதானியகளில் மிகவும் மிருதுவான சிறுதானியம் குதிரைவாலி, அதில் பழங்களை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க சுவையான குழந்தைகள் விரும்பும் உணவை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1/4 கப் நறுக்கிய ஆப்பிள் அன்னாசி பழம்
  • 15 விதை இல்லாது நன்கு சுத்தம் செய்த கருப்பு திராட்சை
  • 2 ஸ்பூன் நெய்

  • 1 – 2 பச்சை மிளகாய் (குழந்தைகளுக்கு மட்டும் என்றால் பச்சை மிளகாய் தவிர்த்து மிளகுதூள் சேர்க்கவும்)
  • உப்பு
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 15 முந்திரி பருப்பு

செய்முறை

  • முதலில் குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஒரு அகலமான அடிகனமான வாணலியில் சிறு தீயில் நெய் சேர்த்து கிராம்பு ஏலக்காயை பொடி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்த குதிரைவாலி அரிசியையும் சேர்த்து நன்கு சிறுதீயில் வறுக்க வேண்டும்.

  • நன்கு வறுத்தப் பின் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தீயை அதிகரித்து தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
  • நன்கு கொதி வந்த பின் சிறு தீயில் அடுப்பை வைத்து வாணலியை மூடி வைக்க வேண்டும். ஐந்தாறு நிமிடத்தில் குதிரைவாலி அரிசி நன்கு வெந்து தயாராக இருக்கும்.
  • வெந்ததை சரிபார்த்து, அடுப்பை அணைத்து மூடி கொண்டு மூடியவாறு ஒரு 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

  • மண்பாத்திரத்தில் இதனை செய்ய குதிரைவாலி சாதம் நல்ல மணமாகவும் நல்ல ருசியாகவும் வெந்திருக்கும்.
  • ஒரு 15 நிமிடங்கள் கழித்த பின் மூடியைத் திறந்து லேசாக கிளறி விடவேண்டும்.
  • நெய்யில் முந்திரிப்பருப்பு திராட்சையை நன்கு வறுத்து அதனுடன் சேர்த்து மற்ற பழங்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • அவ்வளவுதான் சூடான சுவையான குதிரைவாலி ஃபுரூட் தயாராகிவிட்டது. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

குதிரைவாலி ஃபுரூட் புலாவ்

சிறுதானியங்களில் நல்ல மிருதுவான தானியம் குதிரைவாலி. இந்த மிருதுவான, சுவையான சின்ன சின்ன தானியத்தில் நம் வீட்டு சின்ன சின்ன குழந்தைகளுக்கு இனிப்பு, புளிப்பு சேர்ந்த ஒரு ஃபுரூட் புலாவ் செய்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1/4 கப் நறுக்கிய ஆப்பிள் அன்னாசி பழம்
  • 4-5 தோல் நீக்கிய ஆரஞ்சு பழம் சுளைகள்
  • 15 விதை இல்லாது நன்கு சுத்தம் செய்த கருப்பு திராட்சை
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 – 2 பச்சை மிளகாய் (குழந்தைகளுக்கு மட்டும் என்றால் பச்சை மிளகாய் தவிர்த்து மிளகுதூள் சேர்க்கவும்)
  • உப்பு
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 15 முந்திரி பருப்பு

செய்முறை

  • முதலில் குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஒரு அகலமான அடிகனமான வாணலியில் சிறு தீயில் நெய் சேர்த்து கிராம்பு ஏலக்காயை பொடி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்த குதிரைவாலி அரிசியையும் சேர்த்து நன்கு சிறுதீயில் வறுக்க வேண்டும்.
  • நன்கு வறுத்தப் பின் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தீயை அதிகரித்து தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
  • நன்கு கொதி வந்த பின் சிறு தீயில் அடுப்பை வைத்து வாணலியை மூடி வைக்க வேண்டும். ஐந்தாறு நிமிடத்தில் குதிரைவாலி அரிசி நன்கு வெந்து தயாராக இருக்கும்.
  • வெந்ததை சரிபார்த்து, அடுப்பை அனைத்து மூடி மூடியவாறு ஒரு 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.