குதிரைவாலி தோசை

குதிரைவாலி தோசை சிறந்த ஒரு ஆரோக்கியமான உணவு. சிறுதானியங்களில் மென்மையான சிறுதானியம் இந்த குதிரைவாலி. நீரிழிவு, உடல் பருமன் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் உணவு. இந்த தானிய அரிசியை வைத்து வெள்ளை அரிசிக்கு மாற்றான சிறுதானிய தோசை செய்து உண்ண உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஆங்கிலத்தில் இந்த தோசை செய்முறையை தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும்.

தேவையான பொருட்கள்

செய்முறை

  • குதிரைவாலி அரிசியை வெந்தயத்துடன் சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • உளுந்தை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப் பின் உளுத்தம் பருப்பை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • பிறகு வெந்தயத்துடன் குதிரைவாலி அரிசியை நைசாக அரைக்கவும்.
  • இரண்டையும் உப்பு சேர்த்து கலக்கவும்.
  • ஓரங்களை சுத்தம் செய்து மூடி புளிக்க வைக்கவும்.
  • 7 முதல் 10 மணி நேரம் புளிக்கவைத்த பிறகு, தோசைகல்லை சூடாக்கி, மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும்.
  • சுற்றி நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தோசையை மூடிபோட்டு வேக விடவும்.
  • குதிரைவாலி தோசை தயார்.
  • சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாற சுவையாக இருக்கும்.

குதிரைவாலி தோசை

குதிரைவாலி தோசை சிறந்த ஒரு ஆரோக்கியமான உணவு. சிறுதானியங்களில் மென்மையான சிறுதானியம் இந்த குதிரைவாலி. நீரிழிவு, உடல் பருமன் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் உணவு.

⏲️
ஆயத்த நேரம்
10 Hours

⏲️
சமைக்கும் நேரம்
10 Min.

🍴
பரிமாறும் அளவு
4

தேவையான பொருட்கள்

  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • நல்லெண்ணெய்
  • உப்பு

(4 votes)