குதிரைவாலி இனிப்பு உருண்டை

ஊட்டச்சத்து குறைபாடுகளை நம் குழந்தைகளிடமிருந்தும் நம் இந்தியாவிலிருந்தும் வெளியேற்றவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நம் சிறுதானியம். ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் என்றும் நம்முடன் இருக்க நம் மரபிற்கும், மரபணுவிற்கும் பலநூறு ஆண்டுகளாக பரிச்சயமான தானியமே நம் சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி தானியம்.

பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் இந்த குதிரைவாலி அரிசியின் செயல்பாடுகளும், ஊட்டச்சத்துக்களின் அளவும் அதிகம். கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரியது என்பதற்கேற்ப புரதம், தாதுக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து என நுண்ணூட்டம் மற்றும் பேரூட்டச்சத்துகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. 

Kuthiraivali seeds, barnyard millet seeds, kuthiraivali boiled, kuthiraivali rice, Millet Seeds, Millet Rice, Healthy Millets

தேவையான பொருட்கள்

  • 1 கப் குதிரைவாலி
  • 1 கப் வெல்லம் / நாட்டு சர்க்கரை (தரத்தை பொறுத்து அளவு மாறுபடும்.)
  • 2 ஸ்பூன் தேன்
  • 20 சீவிய பாதாம்பருப்பு
  • 4 ஸ்பூன்  தேங்காய்த் துருவல்
  • 4 ஸ்பூன் பசுநெய் (தேவைபட்டால் பயன்படுத்தலாம்)

செய்முறை

  • வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு கப் குதிரைவாலியை வறுத்துக்கொள்ளவும். 
  • ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். 
  • ஒரு கட்டி அல்லது தேவையான அளவு கருப்பு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும் அல்லது நாட்டுசக்கரையை எடுத்துக்கொள்ளவும்.
  • குதிரைவாலி மாவு, வெல்லத்தூளுடன், தேன், சீவிய பாதாம் பருப்பு 20, தேங்காய்த் துருவல் தலா 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து, சிறிது சூடான பசுநெய் விட்டு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.
  • அவ்வளவுதான் குழந்தைகள் விரும்பும் சுவையான சத்தான குதிரைவாலி லட்டு தயார்.

குதிரைவாலி இனிப்பு பாதாம் உருண்டை

(1 vote)



பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் இந்த குதிரைவாலி அரிசியின் செயல்பாடுகளும், ஊட்டச்சத்துக்களின் அளவும் அதிகம்.


⏲️ ஆயத்த நேரம்
15 mins

⏲️ சமைக்கும் நேரம்
15 mins

🍴 பரிமாறும் அளவு
4

🍲 உணவு
சிற்றுண்டி


தேவையான பொருட்கள்
  • 1 கப் குதிரைவாலி
  • 1 கப் வெல்லம் / நாட்டு சர்க்கரை (தரத்தை பொறுத்து அளவு மாறுபடும்.)
  • 2 ஸ்பூன் தேன்
  • 20 சீவிய பாதாம்பருப்பு
  • 4 ஸ்பூன்  தேங்காய்த் துருவல்
  • 4 ஸ்பூன் பசுநெய் (தேவைபட்டால் பயன்படுத்தலாம்)
செய்முறை
  1. வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு கப் குதிரைவாலியை வறுத்துக்கொள்ளவும். 
  2. ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். 
  3. ஒரு கட்டி அல்லது தேவையான அளவு கருப்பு வெல்லத்தைத் தூளாக்கிக்கொள்ளவும் அல்லது நாட்டுசக்கரையை எடுத்துக்கொள்ளவும்.
  4. குதிரைவாலி மாவு, வெல்லத்தூளுடன், தேன், சீவிய பாதாம் பருப்பு 20, தேங்காய்த் துருவல் தலா 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து, சிறிது சூடான பசுநெய் விட்டு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.
  5. அவ்வளவுதான் குழந்தைகள் விரும்பும் சுவையான சத்தான குதிரைவாலி லட்டு தயார்.

(1 vote)