Kuthabadha aasanam, Baddha Konasana, Butterfly Pose, Bound Angle Pose, Cobbler's Pose

குதபாத ஆசனம் / Butterfly Pose / Bound Angle Pose / Cobbler’s Pose / Baddha Konasana

இரு பாதங்களையும் ஆசன வாயை ஒட்டி வைக்கும் ஆசனம் என்பதால் இந்த ஆசனத்திற்கு குதபாத ஆசனம் எனப் பெயர். குதம் + பாதம் + ஆசனம். ஆண்மைக் குறைவைப் போக்கும் ஆசனமாகவும், சுகப்பிரசவம் ஏற்படுத்தும் ஆசனமாகவும் இந்த ஆசனம் உள்ளது. ஆண், பெண் என அனைவரும் ஏற்ற ஆசனமான இந்த குதபாத ஆசனம். உடல் பருமன், மூல நோய் உட்பட பல நோய்களை தீர்க்கும் அற்புதமான ஆசனம்.

குதபாத ஆசனம் செய்முறை

தரை விரிப்பில் உட்கார்ந்து இரு பாதங்களையும் ஒன்றாக இணைத்து குதிக்காலை உடலோடு உள்நோக்கி ஒட்டி வைக்கவேண்டும். மேலும் உடலை, இடுப்பை வளைத்து இயல்பான சுவாசத்துடன் தரையை நெற்றியால் தொடலாம். இன்று கருவுற்ற பெண்களை மருத்துவர்கள் செய்யச் சொல்லும் ஆசனம். சுகப் பிரசவத்திற்கு உதவும் ஆசனம்.

Kuthabadha aasanam, Baddha Konasana, Butterfly Pose, Bound Angle Pose, Cobbler's Pose

உடல் பருமனை குறைக்கும்

தொடை, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதி அதிக சதையை விரைவாக கரைக்கும் ஆசனம். இந்த ஆசனம் பார்க்க மிக எளிதாக இருக்கும் ஆனால் தொடர்ந்து செய்வதாலேயே ஆசனத்தை முழுவதுமாக செய்ய முடியும். முழுவதும் இந்த ஆசனத்தை செய்தால் பல ஆசனங்கள் செய்த பலனை இதிலேயே பெறலாம். உடலை வலுவாகும் ஆசனம்.

மாதவிடாய் கோளாறு நீங்க

குழந்தைபேறுக்கு சிறந்த ஆசனம் இந்த குதபாத ஆசனம். அடிவயிற்று தொந்தரவுகள், கருப்பை தொந்தரவுகள், சினைப்பை கட்டி, மாதவிடாய் கோளாறுகளுக்கு மிக சிறந்த ஆசனம், உள்ளுறுப்புகளுக்கு பலமளித்து பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை நீக்கும்.

ஆண்களுக்கு

மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக் கோளாறை போக்கி தாம்பத்திய உறவில் இச்சையைக் கூட்டும் ஆசனம். விரைவீக்கம், ஹெரண்யா போன்ற பிரச்சனைகளுக்கு மிக சிறந்த ஆசனம்.

மூல நோய்க்கு

ஆசன வாய்ப்பகுதியில் வரும் பாதிப்புகள், வலி, கட்டி மற்றும் மூல நோயைப் போக்கும் சிறந்த ஆசனம் இந்த குதபாத ஆசனம். மலச்சிக்கலையும் போக்கும்.

(1 vote)