Allmania nodiflora; குமட்டிக்கீரை; பச்சை குமட்டி; கொமட்டி கீரை
இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தென்கிழக்கு நாடுகளில் அதிகமாக காணப்படும் ஒரு கீரை வகையை சேர்ந்த மூலிகை தான் இந்த குமுட்டி கீரை / குமட்டிக் கீரை. பலவிதமான சத்துக்களையும் அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான கீரை இந்த குமட்டி கீரை.
அதிக மருத்துவ குணங்கள் கொண்ட இந்த கீரை முன்பெல்லாம் சாதாரணமாக கிராமப்புறங்களில் பார்க்க முடியும். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. நிறைய இடங்களில் இந்த கீரையை பார்க்க முடிவதில்லை. அங்கொன்றும் இங்கொண்றுமாகவும் மட்டுமே இன்று இந்த குமுட்டி கீரையை அதிகம் பார்க்கலாம்.
கிராமங்களில் கீரையாகவும், நாட்டு மருத்துவத்திலும் பயன்படும் இந்த கீரை தரையோடு படரும் கொடி வகை கீரை. வருடம் முழுவதும் செழிப்பாக வளரக்கூடிய இந்த கீரையின் பூக்கள் பச்சை நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். சற்று நீண்டு உருண்டையாக இருக்கும் இந்த குமுட்டி கீரையின் இலைகளிலும் இளஞ்சிவப்பு நிறத்தை ஆங்காங்கே பார்க்கலாம். பொதுவாக வைகாசி மாதத்தில் இந்த கீரைகள் பூத்திருக்கும். அதனை தொடர்ந்து ஐப்பசி வரை இதன் காய்கள் விதைகள் தேர்ச்சி அடையும்.
இதில் வெள்ளை, ஆரஞ்சு நிற குமட்டி உள்ளது. வெள்ளை குமட்டி நீர் உள்ள இடத்தில் வளரும் ஆரஞ்சு நிறம் வறண்ட நிலத்தில் வளரும். சாதாரணமாக சமைத்து உண்ணக்கூடிய கீரை வகைகளில் ஒன்று. இக்கீரையை பருப்போடு சேர்த்து கடைந்து உணவோடு பயன்படுத்தலாம். சிறந்த சுவையானதாக இருக்கும் பல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான கீரை.
இந்த கீரையை அன்றாடம் உணவுடன் சேர்த்துக் கொள்ள நல்ல ஆரோக்கியத்தை பெறமுடியும். பல விதமான உயிர் சத்துகளையும், புரதம், இரும்புச் சத்துக்கள், சுண்ணாம்பு சத்துகளையும் கொண்ட ஒரு அற்புதமான கீரை. பொதுவாக இந்த கீரையை பூப்பதற்கு முன் பறித்து உண்பது சிறந்தது. குமுட்டிக் கீரையை கடையல், பொரியல், கூட்டு என பல வகைகளில் தயாரித்து உண்ணலாம்.
குமுட்டிக் கீரையின் காய்கள் மலச்சிக்கலையும் ஜீரண மண்டலத்தில் வரும் தொந்தரவுகளையும் போக்கக் கூடியது. சிறந்த ஒரு மலமிளக்கியாகவும் உள்ளது. இதன் இலைகள் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. உடலில் ஏற்படும் நோய் தொற்றுகள், வீக்கங்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. நீர் சத்துக்கள் நிறைந்தது, உடலில் ஏற்படும் கெட்ட நீரை அகற்ற கூடியது. ஆண்டி ஆக்சிடென்ட் பண்புகளையும் இந்த கீரை கொண்டுள்ளது. சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த கீரை நோய் எதிர்ப்பு ஆற்றலை அபரிவிதமாக அளிக்கக் கூடியது. இரத்தத்தை தூய்மையாக்க கூடிய கீரை.
நன்றி,மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள்.
நன்றிகள் பல,மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள்.
நன்றி