நரம்பு மண்டலத்திற்கு தேவையான பிராணவாயு, புரதம், எண்ணெய் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் தொடங்கி பலப்பல சத்துக்களும், மருத்துவகுணங்களும் கொண்டது இந்த குள்ளக்கார் அரிசி.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்றதும், அதிலும் குறிப்பாக வலிப்பு, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்படும் உணர்வற்ற நிலைக்கு மாமருந்தாக இந்த அரிசி அமையும்.
மேலும் குள்ளக்கார் அரிசியின் பயன்கள், சத்துக்கள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – குள்ளக்கார் அரிசி.
எளிதாக நரம்புகளுக்கும், மூளைக்கும் வலுசேர்க்கும் குள்ளக்கார் அரிசியினில் எளிதாக கஞ்சி தயாரித்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் குள்ளக்கார் அரிசி குருணை
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 3 பற்கள் பூண்டு
- ¼ கப் தேங்காய் பால்
செய்முறை
சிகப்பு குள்ளக்கார் அரிசியை நன்றாக கழுவி நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும்.
நன்றாக சுத்தம் செய்த பின் குள்ளக்கார் அரிசியினை குருணையாக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு மண்பானையில் 4-5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்றாக தண்ணீர் கொதிவந்ததும்.
அதில் குள்ளக்கார் குருணை, வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு வேகவிடவும்.
இவை நன்கு வெந்த பின் இந்துப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சிறிது கொதிஅடங்கியவுடன் தேங்காய் பாலை சேர்த்து அருந்தலாம்.
இந்த குள்ளக்கார் கஞ்சி நரம்புகளுக்கும், மூளைக்கும் உறுதியை அளிக்கும் கஞ்சி. காலையில் இதனை உட்கொள்வது சிறந்தது.
இதனுடன் ஏதாவது துவையல் அல்லது தொக்கு சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
குள்ளக்கார் அரிசி கஞ்சி
தேவையான பொருட்கள்
- 1 கப் குள்ளக்கார் அரிசி குருணை
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 3 பற்கள் பூண்டு
- ¼ கப் தேங்காய் பால்
செய்முறை
- சிகப்பு குள்ளக்கார் அரிசியை நன்றாக கழுவி நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும்.
- நன்றாக சுத்தம் செய்த பின் குள்ளக்கார் அரிசியினை குருணையாக்கிக்கொள்ள வேண்டும்.
- ஒரு மண்பானையில் 4-5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- நன்றாக தண்ணீர் கொதிவந்ததும்.
- அதில் குள்ளக்கார் குருணை, வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு வேகவிடவும்.
- இவை நன்கு வெந்த பின் இந்துப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சிறிது கொதிஅடங்கியவுடன் தேங்காய் பாலை சேர்த்து அருந்தலாம்.
- இந்த குள்ளக்கார் கஞ்சி நரம்புகளுக்கும், மூளைக்கும் உறுதியை அளிக்கும் கஞ்சி. காலையில் இதனை உட்கொள்வது சிறந்தது.
- இதனுடன் ஏதாவது துவையல் அல்லது தொக்கு சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.