Welcome to HealthnOrganicsTamil !!!

குள்ளக்கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

இயற்கை எல்லாவற்றையும் படைத்து நமக்கு அளித்திருக்கிறது. படைப்பாளிகளையும் கூடவே நமக்கு அளித்திருக்கிறது. அத்தனையையும் வைத்துக்கொண்டு அனுபவிக்க தான் கொடுத்துவைக்கவில்லை பலருக்கு. 

இயற்கை படைத்ததில் ஒன்றை கூட யாராலும் உருவாக்க முடியாது. படைப்பது என்ன? அதன் சூட்சமத்தை கூட இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. படைப்பாளிகள் என்று ஒவ்வொன்றிற்கும் ஒருவரை இயற்கை நியமித்திருக்கிறது, அதற்கு வேண்டிய அனைத்து துணை காரணிகளையும் இயற்கை கூடவே அளித்திருக்கிறது. 

அவ்வாறு இயற்கை அளித்திருக்கும் மிகப்பெரிய பொக்கிஷம் பெண்! இயற்கையின் துணையுடன் தாயின் கருவில் வளரும் குழந்தைக்கு இலவசமாக கிடைக்கும் ஒவ்வொரு உறுப்பிறக்கும் இன்றைய விலையை கணக்கு போட்டால் பல கோடிகளைத் தாண்டும், அதனுடன் விலை மதிப்பே இல்லாத உயிர்.. இவை அனைத்தையும் சற்று கூட சிந்திக்காது எவ்வாறெல்லாம் நம் உடலையும் உயிரையும் வருத்துகிறோம். 

ஒரு லிட்டர் இரத்தம் முதல் இருதயம் வரை அனைத்தையும் செயற்கையாக பெறவேண்டுமென்றால் எவ்வாறெல்லாம் திண்டாட வேண்டும். இதையெல்லாம் மறந்து விட்டு அறிந்தோ அறியாமலோ நாம் ஒவ்வொருவரும் உடலையும், மனதையும் எவ்வாறெல்லாம் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் அறிவியல், விஞ்ஞானம், நவீன மருத்துவம் என்று நம்மை நாமே அவற்றிற்கு பணயமாக்குகிறோம். ‘

அறிவியலும், விஞ்ஞானமும் இருப்பதை இருக்கிறது என்று கூறி, அது உண்மையில் இருக்கிறதா? எவ்வாறு அவை செயலாற்றுகிறது என்பன போன்ற பலவற்றை கண்டுபிடிக்க செயலாற்றுபவர்கள், அதிலும் இன்றுவரை அவர்களின் கண்டுபிடிப்புகள் ஒரு தொந்தரவை (நோயை) எவ்வாறு நிர்வகிப்பது என்பது மட்டுமே தவிர ஆரோக்கியமாக இருப்பதற்கோ அல்லது வந்த தொந்தரவை விரட்டுவததற்கோ இல்லை.

பிரம்மாண்டமான இந்த இயற்கை, உடல் ஆகியவற்றின் படைப்பையும் செயல்பாட்டையும் மறந்து இயங்கிக்கொண்டிருக்கும் உலகில் சிலவற்றை பெரிய கண்டுபிடிப்புகள் என்று நம்பி அவற்றிற்கு அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம். 

இந்த பிரம்மாண்டத்தின் படைப்பினை ஆராய்ந்த சிலர் அவற்றைக் கொண்டு பல எளிய கண்டுபிடிப்புகளையும் சாத்தியப்படுத்தி அதனை இந்த உலகிற்கு வெளிப்படுத்தி பெயரையும் பணத்தையும் ஈட்டுகின்றனர். மற்றவர்களோ நமக்குள் நம் உடலுக்குள் இருப்பதை புரிந்து கொள்ளாமல் வெளியில் காண்பதைக் கண்டு பிரம்மிக்கின்றோம்.

என்னதான் மனிதனின் வாழ்வியல் தரம், விஞ்ஞானம், நவீனம் வளர்த்தாலும் ஆரோக்கியமும், மனஅமைதியும் குழைந்திருக்கிறது என்பது இன்றைய உண்மை. 

“பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்” 

“பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்” 

என்ற கண்ணதாசனின் வரிகள் மனிதன் எதையும் தானாக கண்டுபிடிக்கவில்லை, ஒன்றைக் கண்டான் அதன் செயல்பாட்டினை கொண்டு மற்றொன்றை உருவாக்கினான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 

அவ்வாறு ஒன்றைக் கண்டு மற்றொன்றை உருவாக்கியதில் இன்று உலகமே ஜொலிக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆம் தகவல் தொழில்நுட்பத்தை தான் கூறுகிறேன். உடல், மனம், உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பதை அருமையாகயும் நிதானமாகவும் கண்ட மனிதன் சிறப்பாக இன்று உலகையே கைவிரல்களில், நொடிப்பொழுதில் உருவாக்கியுள்ளான். 

ஆம், நிதானமாக மனிதன் அவனது உடலின் செயல்பாடுகளைக் கண்டான் தகவல் தொழில்நுட்பம் என்ற ஒன்றை கண்டுபிடித்தான்.. அவன் தன் உடலில் கண்டது வேறொன்றையும் அல்ல நரம்புகளையும், நரம்புமண்டலத்தின் இயக்கத்தையும் தான். 

இன்றையவர்கள் அனைவருக்கும் அத்துபிடியான தகவல் தொழில் நுட்பத்தின் செயல்பாடுகளையும் பற்றி அதிகம் குறிப்பிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

அதிசயமான தகவல் தொழில்நுட்பம் தான் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் காரணமாக இருக்கிறதென்றால் அது மிகையாகாது. சிவனே என்ற உடலுக்கு எவ்வாறு உயிரும் சுவாசமும் சக்தியைக் கொடுக்கிறதோ அவ்வாறே நரம்புகளும் செயல்படுகிறது. 

உடலில் நடக்கும் அன்றாட செயல்படுங்கள் முதல் அன்னிச்சை செயல்கள் வரை அனைத்திற்கும் காரணம் நமது நரம்புகளே. தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் நரம்புகளுக்கு ஆங்காங்கே ஒரு ஹப்பும் இருக்கிறது, அதே போல் தலைமை மையம் (மூளை), இரண்டாம் கட்ட மையம் (தண்டுவடம்) என்பனவும் உள்ளது.

எந்த செயலையும் உடனுக்குடன் செயல்படுத்த அவை தங்களுக்குளேயே சில பிரிவுகளையும், நடவடிக்கை மையத்தையும் வைத்துள்ளது. ஒவ்வொரு உணர்வுகள் முதல் அசைவுகள் வரை அனைத்தையும் செயல்படுத்தும் இந்த நரம்புகளுக்கு பிரதானமாகத் தேவைப்படுவது பிராணவாயு.

இரத்தத்தின் மூலமாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணப்படும் இந்த பிராணவாயு பூமிக்கு எதிர் திசையில் இரத்தத்துடன் பயணிக்க முதலில் போதுமான சத்துக்கள் தேவை. இந்த பயணத்தில் ஏதாவது தடங்களோ அல்லது தாமதமோ ஏற்பட்டால் மூளையில் உள்ள நரம்புகள் ஒரேடியாக செயலிழக்கவும் செய்யும், மற்றவை பாதிப்படைய செய்யும்.

இவ்வாறு ஒரு நரம்பு செயலிழக்க அந்த வேலைகளை மற்ற நரம்புகளின் துணையுடன் பைபாஸ் செய்து மெதுவாகவும் செயப்படுத்துகிறது. அதிகமாக டவுன்லோட் செய்தால் எவ்வாறு இன்டர்நெட் மெதுவாக வேலைசெய்யுமோ அதனை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும்.

பொதுவாக மனஉளைச்சல், மனஅழுத்தம், வலிநிவாரண மருந்துகள், மாத்திரைகள், வெளிக்காற்று அதிகம் வராத அறைகள், குளிரூட்டப்பட்ட அறைகள், விபத்துகள், உணவில் பூச்சிக்கொல்லிகள், தீமைசெய்யும் கிருமிகள், எண்ணெய் சத்து பற்றாக்குறை மற்றும் சத்துப்பற்றாக் குறைகளால் நரம்புகள் பலகீனமடைவதுடன், செயலிழந்தும் போகிறது.

மூளையின் நரம்புகள் ஒருமுறை செயலிழந்தால் இறுதிவரை செயலிழந்ததுதான். அதுமட்டுமல்ல மூளையில் உள்ள பாதிப்பை எளிதாக அறியவும் முடியாது, மற்ற நரம்புகளையும், செயல்பாடுகளையும் வைத்துதான் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு நடந்தால் அதன் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும்.

நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக பிராணசத்தும், எண்ணெய் சத்துக்களும், புரதமும் அத்தியாவசியமாகிறது. மற்ற அனைத்து சத்துக்களும் மன அமைதியும் பலமான மற்றும் சிறந்த செயல்பாட்டிற்கு காரணமாகிறது.

குள்ளக்கார் அரிசி

வலுவான நரம்புகளின் இயக்கத்திற்கு நமது பாரம்பரிய உணவுகளில், பாரம்பரிய அரிசிகளின் வரிசையில் குள்ளக்கார் அரிசி பெரிதும் உதவுகிறது.

குள்ளக்கார் அரிசி, கார் வகையை சேர்த்த குறுகியகால அரிசி ரகம். சிகப்பு நிற மோட்டா அரிசியான இதனை எளிதாக எந்த இரசாயனமும், பூச்சி கொல்லிகளும் இல்லாது வளரக்கூடியது.

பொதுவாக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், இராசயனங்களாலும் நரம்புமண்டலம் அதிகஅளவில் பாதிப்படைகிறது. இதிலிருந்தும் நமக்கு இந்த சிகப்பு குள்ளக்கார் அரிசி பாதுகாப்பை அளிக்கிறது. 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் விளையக்கூடிய இந்த அரிசி பலகாரத்திற்கும், கஞ்சிக்கும் சுவையானதாக இருக்கும். இட்லி, தோசை, அப்பம், இடியப்பம், முறுக்கு, அதிரசம், புட்டு, கொழுக்கட்டை, உப்புமா என்ன அனைத்து பலகாரத்திற்கும் ஏற்றது இந்த குள்ளக்கார் அரிசி.

நரம்பு மண்டலத்திற்கு தேவையான பிராணவாயு, புரதம், எண்ணெய் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் தொடங்கி பலபல சத்துக்களும், மருத்துவகுணங்களும் கொண்டது இந்த குள்ளக்கார் அரிசி.

மன உளைச்சலாலும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்றது இந்த பாரம்பரிய குள்ளக்கார் அரிசி. மனநிம்மதிக்கும் அமைதியான தூக்கத்திற்கும் இந்த அரிசியில் வைத்த கஞ்சி அருந்த சிறந்த பலன் கிடைக்கும்.

பல நேரங்களில் சத்துக்குறைபாடுகள் அதிக அளவில் மனநோயினை உருவாக்குகிறது. இதற்கு சிறந்த தீர்வாக இந்த அரிசி உணவு அமைகிறது. கஞ்சியாக மட்டுமில்லாது சாதமாகவும் இதனை வைத்து நன்கு மென்று உண்ண உடலில் ஏற்பட்டிருக்கும் ஜீரண சுரப்புகள் குறைபாடு நீங்கும். சுறுசுறுப்பையும், மனத்தெம்பையும் எளிதாக அடையலாம். 

குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்றதும், அதிலும் குறிப்பாக வலிப்பு, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்படும் உணர்வற்ற நிலைக்கு மாமருந்தாக இந்த அரிசி அமையும். 
எளிதாகவே நரம்புகளுக்கும், மூளைக்கும் வலுசேர்க்கும் குள்ளக்கார் அரிசியினை தயாரித்து உண்ணலாம்.

இயற்கையும், தாயும் படைத்த இந்த உடலையும் உயிரையும் காக்க நமது பாரம்பரிய உணவுகளே சிறந்தது. பல கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக இருக்கும் நமது உடலை காப்பது நமது கடமை. கண்டுபிடிப்புகள் இன்னும் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஆராய்ந்துதான் வருகிறது.

இயற்கை அளித்திருக்கும் இந்த உடலுக்கு செயற்கையாகவும், பிரத்தேகமாகவும் எந்த கண்டுபிடிப்பும் தேவையில்லை, இயற்கையான உணவே போதுமானது.

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

சோற்றுக்கே தாளமாம், பருப்புக்கு நெய் வேண்டுமாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!