குடவாழை அரிசி / குடைவாழை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

நமது பாரம்பரிய அரிசிகளில் உடலுக்கு பல விதங்களில் நன்மைகளையும் உடலைக்காக்கும் அற்புதமான அரிசி குடைவாழை அரிசி. குடவாழை, குடல் வாழை என பல பெயர்களையும் கொண்ட சிறந்த அரிசி.

குடைவாழை என்ற இந்த அரிசி குடல் சம்மந்தமான தொந்தரவுகள், ஜீரண கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றது. நம் குடலை வளமாக்கும் அரிசி நம் ‘குடைவாழை அரிசி’. குடலை சுத்தப்படுத்தி குடலை வாழவைக்கும் அரிசி என்பதால் குடல் வாழை அரிசி என்றும் இதனை அழைப்பதுண்டு.

விளைந்து வரும் இந்த குடைவாழை நெல்கதிர்கள் குடை விரித்தார் போல் இருப்பதாலும் குடைவாழை என்ற பெயர் கொண்ட அரிசி. சிவப்புநிற அரிசி ரகத்தில் மோட்ட ரகத்தை சேர்ந்த அரிசி. எந்தவிதமான செயற்கை இரசாயன உரம், பூச்சிகொள்ளிகள் இன்றி விளையும் அரிசி. எல்லா மண் வகைகளிலும் விளையக்கூடியது. இயற்கையிலேயே நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்ட அரிசி. வறட்சி, வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்தையும் தாக்குப் பிடித்து வளரும் அரிசி.

உப்பு தண்ணீரிலும் விளையும் தன்மைகொண்ட சிறந்த அரிசி. 130 நாட்களில் விளையும் அரிசி. குறைந்த காலத்தில் ஆண்டிற்கு மூன்று போகம் விளையும் இந்த அரிசியை பல விவசாயிகள் சுலபமாகவும், எளிதாகவும் விளைவிக்க முடியும். குடைவாழை விதை நெல்லை விதைத்தபின் ஒரு மழை பெய்தாலே போதும் சிறப்பாக விளையும் ரகம். அதிக நீரின்றி விளையும் சிறந்த பாரம்பரிய அரிசி.

ஒருவேளை அரிசி சோறு உண்ணும் விவசாயிகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும் அரிசி. அதிலும் குடைவாழை நீராகாரத்தை காலையில் பருக நாள் முழுவதற்கும் தேவையான தெம்பையும், ஆற்றலையும் அளிக்கும் அற்புத அரிசி இந்த குடைவாழை.

இரும்பு சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மக்னீசியம், பாஸ்பராஸ் சத்துக்கள் நிறைந்தது.

குடல், ஹர்மோன் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த அரிசி. நீரிழிவை எளிதில் விரைவாக கட்டுபடுத்தும் அரிசி. வாய், வயிறு, சிறுகுடல், பெருங் குடலை பலப்படுத்தும். வாய்ப்புண், வயிற்ருப்புண் நீக்கும். மலச்சிக்கலை தடுக்கும்.

இந்த குடைவாழை அரிசியில் கஞ்சி தயாரித்து பருக அஜீரண கோளாறுகள் தீரும். ஆச்சரியமாக தானே உள்ளது அதன் பெயரும் மகத்துவத்தையும் அறிந்து கொள்ளும்போது. இந்த பாரம்பரிய அரிசியை நமது உணவில் அங்கமாக்க சிறந்த உடலையும், ஆற்றலையும், நோய் எதிர்ப்பு திறனையும் பெறமுடியும்.

மேலும் குடைவாழை அரிசியைப் பற்றி தெரிந்துக் கொள்ள

https://www.youtube.com/watch?v=fxnDrsi-yF8
(15 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *