கொத்தமல்லி சம்பா – நம் பாரம்பரிய அரிசி

எந்த ஒரு உணவையும் நல்ல சுவையாகவும் ருசியாகவும் சமைத்தாலும் இறுதியில் கொத்தமல்லி சேர்க்கவில்லை என்றால் அந்த உணவு முழுமையடையாத உணவாகவே இருக்கும். அந்த அளவிற்கு கொத்தமல்லியின் நறுமணம் நம் தமிழகத்தின் ஒவ்வொரு உணவிலும் பிரதானமான ஒன்று. உணவின் சுவையை அதிகரிக்கக்கூடிய ஒன்றாகவும் கொத்தமல்லி இலைகள் உள்ளது.

அப்பேற்பட்ட கொத்தமல்லியின் மணத்தை கொண்டிருக்கக் கூடிய ஒரு அற்புதமான அதிசய ரக அரிசி என்றால் அது இந்த கொத்தமல்லி சம்பா அரிசி. தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளை சேர்ந்த சிவப்பு அரிசியை கொண்டது இந்த கொத்தமல்லி சம்பா அரிசி.

பசியை தூண்டும் அரிசி

கொத்தமல்லி இலைகளின் நறுமணத்தை அப்படியே பெற்றிருக்கக் கூடிய ஒரு அற்புதமான அரிசி ரகம் இது. கொத்தமல்லியை கொண்டு அல்லது கொத்தமல்லி தூவி தயாரிக்கப்படும் எல்லா வகை உணவுகளுக்கும் இந்த கொத்தமல்லி சம்பா அரிசியை பயன்படுத்தும் போது உணவின் சுவை, உணவின் நறுமணம் கூடுதலாகவும், பசியை தூண்டக் கூடியதாகவும் இருக்கும்.

பொதுவாக பசியைத் தூண்டக்கூடிய ஒரு சிறந்த காரணி எது என்றால் அது உணவில் இருக்கக்கூடிய நறுமணம். வீட்டுக்கு வரும்போது வீட்டு வாசல் வரை வரக்கூடிய உணவின் மணம் பசியை தூண்டக்கூடியது. அதுவும் தெருமுனை வரைக்கும் நம்ம வீட்டு பிரியாணியின் நறுமணம் ஊரையே தூக்கும் அளவு வந்தால் பசியே இல்லாத மனிதருக்கும் பசி எடுக்கும். அந்தளவு இந்த கொத்தமல்லி அரிசியை சாதமாக சமைத்தாலே போதும் அதன் நறுமணம் பசியை அதிகரிக்கும். பசிஎடுக்காத குழந்தைகள் பெரியவர்களுக்கு சிறந்த அரிசி. பிரியாணி மட்டுமல்லாமல் கலவை சாதங்களை தயாரிக்கவும் ஒரு அற்புதமான ரகம் என்றால் அது இந்த கொத்தமல்லி சம்பா அரிசி.

உருண்டை வடிவ அரிசி

பசியைத் தூண்டக்கூடிய இந்த சிகப்பு நிற பாரம்பரிய அரிசி பலவிதமான சத்துக்களையும் கொண்டிருக்கக்கூடியது. இந்த அரிசியன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த அரிசியின் வடிவம். பொதுவாக அரிசி என்றவுடன் நீளமாகவும், அன்றாடம் பயன்படுத்தும் அளவான அரிசியையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த கொத்தமல்லிச் சம்பவின் சிறப்பே இதனுடைய உருண்டை வடிவம். கொத்தமல்லி விதைகளைப் போல வடிவத்தில் இருக்கக்கூடிய ஒரு வகை அரிசி தான் இந்த பாரம்பரிய அரிசி.

கொத்தமல்லி சம்பா அரிசியின் சத்துக்கள்

உருண்டை வடிவ சிகப்புநிற அரசியான இந்த கொத்தமல்லி சம்பா பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளைத் தயாரிக்க சிறந்த ஒரு அரிசி. அதுமட்டுமில்லாமல் சாதாரணமாக அரிசி சாதமாகவும் இதனை தயாரிக்கலாம். பல விதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான அரிசி. இதனுடைய தவிடில் அதாவதும் சிகப்பு நிறத்தில் மேல் தோலில் வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

பொதுவாக உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட கூடிய நேரங்களில் அந்த இடத்திலிருந்து வெளியேறக்கூடிய ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய தன்மையை அதிகமாகக் கொண்ட ஒரு அரிசி என்றால் அது இந்த கொத்தமல்லி சம்பா அரிசி. இந்த சிகப்பு நிற பாரம்பரிய அரிசியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய தன்மையைக் கொண்டதாகவும் எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடியதாகவும் உள்ளது.

பசியை தூண்டக் கூடிய இந்த அரிசி செரிமானத்தை அதிகரிக்கக் கூடியதாகும். இதனை சமைப்பது மிகவும் எளிமையானது. இந்த அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு என பலவிதமான உணவுகளை தயாரித்து உண்ணலாம். சாதமாகவும் செய்து உட்கொள்ளலாம். உடலுக்கு வலிமையைத் தரும்.

குறைந்த நீரில் விளையும் கொத்தமல்லி சம்பா அரிசி

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு அற்புதமான ரகம் இது. பொதுவாக நான்கு முதல் ஐந்து மாதங்களில் வளரக்கூடிய இந்த கொத்தமல்லி சம்பா அரிசி விளைய அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக தண்ணீர் இல்லாமல் இருக்க சிறந்த ஒரு விளைச்சலைக் கொடுக்கும். நீரழிவு, உடல்பருமன், சத்துக் குறைபாடு போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரு அற்புதமான உணவாக இருக்கும் அரிசி. பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய வறட்சியை தாங்கி வரக்கூடிய அரிசி.

இயற்கை விவசாயத்தில் விளையக்கூடிய ஒரு அற்புதமான பாரம்பரிய ரகம் இந்த சிவப்பு நிற கொத்தமல்லி சம்பா அரிசி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த ரகமாகவும் உள்ளது. எளிமையான செரிமானமும், அதிக சத்துக்களும், இதனுடைய நறுமணமே இந்த அரிசியின் சிறப்பு என்று கூட சொல்லலாம்.

இந்த வட்ட வடிவ சிகப்பு நிற உருண்டை அரிசி எளிமையாக செரிமானமாகக் கூடியது. இந்த பாரம்பரிய அரிசியை விரைவாக வேகவைத்து உண்ணலாம். கொத்தமல்லி சம்பா அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து, மூன்று முதல் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து மண் சட்டியில் சிறுதீயில் இருபது நிமிடம் வைத்து சமைக்க சாதம் மலர்ந்து நல்ல நறுமணத்துடன் தயாராகிவிடும். இந்த அரிசியை மாவாகத் திரித்து இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளையும் தயாரிக்கலாம். ஊற வைத்து இட்லி, தோசை செய்யலாம். வத்தல், வடகம் போன்ற உணர்வுகளுக்கும் சிறந்தது.

(2 votes)