செட்டிநாடு கோசுமல்லி

செட்டிநாட்டு உணவுகளில் பெயர்போன ஒரு சிறந்த உணவு இந்த கோசுமல்லி. இடியப்பம், இட்லி, தோசைக்கு சிறந்த தொட்டுக்கை இந்த கோசுமல்லி. அதிலும் பெரும்பாலும் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் இந்த கோசுமல்லியை தாளிச்ச இடியாப்பத்திற்கு பரிமாறுவது வழக்கம்.

கோசுமல்லிக்கு செட்டிநாட்டில் தனித்துவமான சுவையும் மணமும் உண்டு. பொதுவாக காரத்திற்கு பச்சைமிளகாய் மிளகையும், சிறிது வரமிளகாயை கொண்டு தாளிக்க நல்ல மணமாக இருக்கும்.

இந்த கோசுமல்லியை தயரிக்க பிரதானமாக கத்திரிக்காயை பயன்படுத்துவதுண்டு. எல்லா கத்திரிக்காயையும் இதற்கு பயன்படுத்தலாம் என்றாலும் முற்றல் இல்லாமல் விதையிருக்கும் கத்திரிக்காய்கள் இதற்கு சிறந்தது. அவ்வாறு தேர்ந்தெடுத்த கத்திரிக்காயை இந்த கோசுமல்லி செய்ய இரண்டு வகையில் முதலில் தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம். ஒன்று கத்திரிக்காயை நேரடியாக அடுப்பில் சுட்டு வேகவைக்கும் முறை, இது கூடுதல் சுவையை கோசுமல்லிக்கு அளிக்கும், மற்றொன்று வேகவைக்கும் முறை. செட்டிநாட்டில் விறகடுப்பு அல்லது கரியடுப்பில் இந்த கத்திரிக்காய்களை வேகவைத்து செய்வதால் கூடுதல் சுவையை அனுபவிக்க முடியும்.

கதிரிக்காய்களுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை ஆகிய சில பொருட்களே போதும். எந்த விதமான பொடி அல்லது மசாலாவும் இதற்கு தேவையில்லை. குறிப்பாக இறுதியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி இலைகள் இந்த கோசுமல்லிக்கு அவசியமானது மற்றும் சுவையை அளிக்கக் கூடியது. இனி செட்டிநாடு கோசுமல்லியை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 4 கத்திரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 20 சின்ன வெங்காயம் (சிறிதாக நறுக்கியது) (அல்லது பெரிய வெங்காயம் -1)
  • 1 தக்காளி (பெரியது)
  • 6 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • சிறிது புளி ((ஒரு சின்ன சுளை))
  • கொத்துமல்லி தழை

தாளிக்க

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து பருப்பு
  • சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் 4 கத்தரிக்காயை எடுத்துக் கொண்டு அதனை நன்கு சுத்தம் செய்த இரண்டு முறையில் முதலில் தயாரித்துக் கொள்ளலாம்.
  • ஒன்று அடுப்பில் வைத்து நேரடியாக தீயில் சுட்டு எடுக்க வேண்டும். கத்தரிக்காயின் மேல் இருக்கும் தோல்கள் நன்கு நிறம் மாறி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடலாம்.
  • உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டாக நறுக்கி நன்கு வேகவைத்து எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும்.
  • கத்திரிக்காயை சுட்டு எடுக்கும்பொழுது அதன் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.
  • மற்றொரு முறை இந்த கத்தரிக்காய்களை இரண்டாக நறுக்கி அதனுடன் உருளைக்கிழங்கையும் இரண்டாக நறுக்கி சிறிது தண்ணீரில் நன்கு மசியும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • பிறகு எந்த முறையில் வேக வைத்தாலும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கின் தோலை உரித்து கொள்ள வேண்டும்.
  • கத்திரிக்காய்களில் மெல்லியதாக தோல் வரும் அதனை பொறுமையாக உரிக்கவேண்டும்.
  • தோலை உரித்த பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கைகளால் மசித்துக் கொள்ள வேண்டும்.

  • பின் புளியை கரைத்து புளி கரைசலை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காயுடன் புளி கரைசலை கலந்து உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • பின் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

  • சற்று வதங்கியதும் இறுதியாக தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்.
  • அனைத்தும் நன்கு வதங்கிய பின் அதில் புளியுடன் கரைத்து வைத்திருக்கும் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கலவையை சேர்க்க வேண்டும்.

  • கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • ஏனெனில் இந்த கோசுமல்லி அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • அடுப்பை அணைத்த பின் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான செட்டிநாடுகோசுமல்லி தயார்.
  • இடியாப்பம், இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாற பிரமாதமாக இருக்கும்.

5 from 1 vote

செட்டிநாடு கோசுமல்லி

செட்டிநாட்டு உணவுகளில் பெயர்போன ஒரு சிறந்த உணவு இந்த கோசுமல்லி. இடியப்பம், இட்லி, தோசைக்கு சிறந்த தொட்டுக்கை இந்த கோசுமல்லி. அதிலும் பெரும்பாலும் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் இந்த கோசுமல்லியை தாளிச்ச இடியாப்பத்திற்கு பரிமாறுவது வழக்கம்.
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 30 minutes

தேவையான பொருட்கள்

  • 4 கத்திரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 20 சின்ன வெங்காயம் (சிறிதாக நறுக்கியது) (அல்லது பெரிய வெங்காயம் -1)
  • 1 தக்காளி (பெரியது)
  • 6 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • சிறிது புளி ((ஒரு சின்ன சுளை))
  • கொத்துமல்லி தழை

தாளிக்க

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து பருப்பு
  • சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் 4 கத்தரிக்காயை எடுத்துக் கொண்டு அதனை நன்கு சுத்தம் செய்த இரண்டு முறையில் முதலில் தயாரித்துக் கொள்ளலாம்.
  • ஒன்று அடுப்பில் வைத்து நேரடியாக தீயில் சுட்டு எடுக்க வேண்டும். கத்தரிக்காயின் மேல் இருக்கும் தோல்கள் நன்கு நிறம் மாறி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடலாம்.
  • உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டாக நறுக்கி நன்கு வேகவைத்து எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும்.
  • கத்திரிக்காயை சுட்டு எடுக்கும்பொழுது அதன் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.
  • மற்றொரு முறை இந்த கத்தரிக்காய்களை இரண்டாக நறுக்கி அதனுடன் உருளைக்கிழங்கையும் இரண்டாக நறுக்கி சிறிது தண்ணீரில் நன்கு மசியும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு எந்த முறையில் வேக வைத்தாலும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கின் தோலை உரித்து கொள்ள வேண்டும்.
  • கத்திரிக்காய்களில் மெல்லியதாக தோல் வரும் அதனை பொறுமையாக உரிக்கவேண்டும்.
  • தோலை உரித்த பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு கைகளால் மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் புளியை கரைத்து புளி கரைசலை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காயுடன் புளி கரைசலை கலந்து உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • பின் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து தாளித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
  • சற்று வதங்கியதும் இறுதியாக தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும்.
  • அனைத்தும் நன்கு வதங்கிய பின் அதில் புளியுடன் கரைத்து வைத்திருக்கும் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கலவையை சேர்க்க வேண்டும்.
  • கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • ஏனெனில் இந்த கோசுமல்லி அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • அடுப்பை அணைத்த பின் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான செட்டிநாடுகோசுமல்லி தயார்.
  • இடியாப்பம், இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாற பிரமாதமாக இருக்கும்.

1 thought on “செட்டிநாடு கோசுமல்லி

Comments are closed.