கொள்ளு துவையல்

உடல் பருமனுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள் கொள்ளு. உடல் எடையை குறைக்க சிறந்தது இந்த துவையல். உடலின் கொழுப்புச்சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு சற்று உஷ்ணத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்த கொள்ளு துவையலை அவ்வப்போது தயாரித்து உண்பதால் உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கழிவுகள், கெட்ட கொழுப்பும் நீங்கும். அதிலும் இந்த துவையலில் புளிக்கு பதிலாக கொடம்புளி பயன்படுத்துவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கொள்ளு
  • 3 – 5 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • ஒரு துண்டு கொடம்புளி

  • 5 பல் பூண்டு
  • சிறிது கடுகு
  • 5 சின்ன வெங்காயம்
  • உப்பு
  • சிறிது கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் கொள்ளை வெறும் வாணலியில் அல்லது சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • கொள்ளு நன்கு சூடேறி வாசம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
  • பின் அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்த்தில் மாற்றி ஆற வைத்துக்கொள்ளவேண்டும்.

  • பின் சிறிது நல்லெண்ணையில் சிறிது சீரகம், வர மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வறுத்த கொள்ளு, சீரகம், வரமிளகாய், உளுந்து, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • சிறிது நல்லெண்ணையில் கடுகு, சிறிது சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து வதக்கி இறக்கி அரைத்தவற்றுடன் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.
  • அவ்வளவு தான் கொள்ளு துவையல் தயார்.

5 from 1 vote

Side Dish
Indian
horsegram thuvaiyal, kollu thuvaiyal
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 10 minutes

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கொள்ளு
  • 3 – 5 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • ஒரு துண்டு கொடம்புளி
  • 5 பல் பூண்டு
  • சிறிது கடுகு
  • 5 சின்ன வெங்காயம்
  • உப்பு
  • சிறிது கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் கொள்ளை வெறும் வாணலியில் அல்லது சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • கொள்ளு நன்கு சூடேறி வாசம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
  • பின் அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்த்தில் மாற்றி ஆற வைத்துக்கொள்ளவேண்டும்.
  • பின் சிறிது நல்லெண்ணையில் சிறிது சீரகம், வர மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வறுத்த கொள்ளு, சீரகம், வரமிளகாய், உளுந்து, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • சிறிது நல்லெண்ணையில் கடுகு, சிறிது சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து வதக்கி இறக்கி அரைத்தவற்றுடன் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.
  • அவ்வளவு தான் கொள்ளு துவையல் தயார்.

1 thought on “கொள்ளு துவையல்

Comments are closed.