கொள்ளு கஞ்சி / Kollu Kanji
உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பையும் தேவையில்லாத சதையையும் எரித்து உடல் பருமைனை குறைக்கும் ஆற்றல் நிறைந்த தானியம் கொள்ளு. அளவோடு இதனை உட்கொள்ள சிறந்தது. வாரம் ஒருமுறை உட்கொள்ள நல்ல பலனை அளிக்கும். அதிகளவு உட்கொண்டால் உஷ்ணம் சார்ந்த தொந்தரவுகளை ஏற்படுத்தும். உடல் பருமனுக்கு அவ்வப்பொழுது சிறுதானிய கஞ்சியையும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

தேவையான பொருட்கள்
- ¼ கப் கொள்ளு
- 2 ஸ்பூன் அரிசி
- சிறிது கடுகு
- செக்கு நல்லெண்ணெய்
- 10 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- சிறிது கொத்தமல்லி
- சிறிது கருவேப்பிலை
- உப்பு
செய்முறை
- முதலில் கொள்ளு எடுத்துக்கொண்டு அதனை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிறு தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் அரிசியையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டும் நன்றாக ஆறியதும் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு மண் சட்டியில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடித்து வைத்திருக்கும் கலவையையும் சேர்த்து வேகவிடவும்.
- நன்கு வெந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தைக்கொண்டு நன்கு மசித்துக் கொள்ளவேண்டும்.
- பின் ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி வெந்து தயராக இருக்கும் கஞ்சியில் சேர்க்கவும்.
- கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து பருகலாம்.

கொள்ளு கஞ்சி

கொழுத்தவன் கொள்ளு விதை, இளைத்தவன் எள்ளு விதை.
உடல் எடை குறையுமா
ஆம்
Body heat achina enna panna adigama sapida koodathunu solringa nan 92 kg iruken nan evlo days sapidalam
take buttermilk and fruits a lot too. thnk u