வரகு அரிசி இனிப்பு பொங்கல்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் பொங்கல், இட்லி, கஞ்சி, பிரியாணி, முறுக்கு, தட்டை என விட விதமான பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம்.

எளிமையாகவும் விரைவாகவும் வேகக்கூடிய சிறுதானிய வகையை சேர்ந்த வரகரிசி இனிப்பு பொங்கல் சுவையும், சத்துக்களும் அபரிவிதமாக கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது, அனவைரும் விரும்பி உண்ணக்கூடியது.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகரிசி
  • ½ கப் பாசிபருப்பு
  • 1 ½ கப் நாட்டுச் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 10 முந்திரி பருப்பு
  • 10 உலர்ந்த திராட்சை
  • ¼ கப் பசு நெய்

செய்முறை

வராகரிசி, பருப்பை கழுவி 1 கப்புக்கு 2 1/2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து மண் பானையில் வேகவிடவும். 

5 நிமிடத்திற்கு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடிவைத்து சிறுதீயில் 15 – 20 நிமிடம் வேகவிடவும்.

பருப்பும் வராகரிசியும் நன்கு வெந்த பின் நாட்டு சக்கரை சேர்த்து கிளறவும். 

நாட்டு சர்க்கரை வரகரிசி சாதத்தின் சூட்டிலேயே இளகிவிடும்.

இது செய்யும் போதே தாளிக்கும் கரண்டியில் 1 ஸ்பூன் பசு நெய்யை சற்று சூடு படுத்தி ஏலக்காயை நசுக்கி சேர்த்து அதனுடன் உலர்ந்த திராட்சை முந்திரியை போட்டு சிவக்க வறுத்து நெய்யுடன் பொங்கலில் கொட்டவும்.

பின் நன்றாக மீதியுள்ள நெய்யை விட்டு பொங்கலை கிளறி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி நாட்டுச்சக்கரையின் வாசம் போனதும் இறக்கி பரிமாறலாம். 

தைத் திருநாள் பொங்கலுக்கு நமது பாரம்பரிய சிறுதானிய அரிசியில் இனிப்பு பொங்கல் செய்து உண்பது சிறப்பானது.

வரகு இனிப்பு பொங்கல்

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கால்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. 
ஆயத்த நேரம் : – 20 hours
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 20 hours 20 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகரிசி
  • ½ கப் பாசிபருப்பு
  • 1 ½ கப் நாட்டுச்சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 10 முந்திரி பருப்பு
  • 10 உலர்ந்த திராட்சை
  • ¼ கப் பசு நெய்

செய்முறை

  • வராகரிசி, பருப்பை கழுவி 1 கப்புக்கு 2 1/2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து மண் பானையில் வேகவிடவும். 
  • 5 நிமிடத்திற்கு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடிவைத்து சிறுதீயில் 15 – 20 நிமிடம் வேகவிடவும்.
  • பருப்பும் வராகரிசியும் நன்கு வெந்த பின் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும். 
  • நாட்டு சக்கரை வரகரிசி சாதத்தின் சூட்டிலேயே இளகிவிடும்.
  • இது செய்யும் போதே தாளிக்கும் கரண்டியில் 1 ஸ்பூன் பசு நெய்யை சற்று சூடு படுத்தி ஏலக்காயை நசுக்கி சேர்த்து அதனுடன் உலர்ந்த திராட்சை முந்திரியை போட்டு சிவக்க வறுத்து நெய்யுடன் பொங்கலில் கொட்டவும்.
  • பின் நன்றாக மீதியுள்ள நெய்யை விட்டு பொங்கலை கிளறி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி நாட்டுச்சக்கரையின் வாசம் போனதும் இறக்கி பரிமாறலாம். 
  • தைத் திருநாள் பொங்கலுக்கு நமது பாரம்பரிய சிறுதானிய அரிசியில் இனிப்பு பொங்கல் செய்து உண்பது சிறப்பானது.