வரகு அரிசி கிச்சடி / Varagu Kichadi

வரகு அரிசி சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த அன்றாட உணவாகும். கல்லீரல் செயல்பாட்டிற்கு நல்லது. உடலுக்கு தேவையான ஜீரண நீர் மற்றும் நிணநீரை சீராக சுரக்க உதவுகிறது. For English Kodo millet Kichadi Recipe.

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று. சாதாரண சாதம் முதல் வரகு பொங்கல், வரகு இட்லி, வரகு கஞ்சி, வரகு பிரியாணி, முறுக்கு, தட்டை என விட விதமான பலகாரங்களை இந்த வரகரிசியில் தயாரிக்கலாம்.

இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு கிச்சடி மிகவும் எளிமையாக தயாரிக்கக் கூடியது. நீரிழிவு, உடல் பருமன், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

மேலும் வரகரிசியின் பயன்கள், சத்துகள் மற்றும் நன்மைகளை தெரிந்துக்கொள்ள – வரகு அரிசி / Kodo Millet in Tamil.

தேவையான பொருட்கள்

  • ¼ கப் பச்சை பட்டாணி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 தக்காளி
  • சிறிது கிராம்பு
  • சிறிது பட்டை

  • சிறிது பிரிஞ்சி இலை
  • சிறிது ஏலக்காய் 
  • 5 முந்திரி
  • 2 பச்சைமிளகாய்

  • 1 ஸ்பூன் நெய்
  • 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
  • உப்பு
  • 1 சிட்டிகை  மஞ்சள் தூள்

செய்முறை

  • வரகு அரிசியை நன்கு களைந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும். 
  • வாணலியில் கடலை எண்ணெய் கிராம்பு, பட்டை.பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி, சிறிதாக நறுக்கிய காய்கறி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 
  • பின் ஊறவைத்திருக்கும் வரகினை சேர்த்து கிளறி 3 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். 
  • நன்றாக வெந்ததும் நெய்  சேர்த்து கிளறவும்.
  • கொத்தமல்லி தூவலாம். 
  • சுவையான இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு கிச்சடி தயார்.
  • இந்த வரகு கிச்சடியை கெட்டி சட்னியுடன் பரிமாற நல்ல சுவையாக இருக்கும்.

வரகு கிச்சடி

இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு கிச்சடி மிகவும் எளிமையாக தயாரிக்கக் கூடியது. நீரிழிவு, உடல் பருமன், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் வரகு அரிசி
  • 1 வெங்காயம்
  • ¼ கப் கேரட்
  • ¼ கப் பீன்ஸ்