வெள்ளை அரிசிக்கு பதில் வரகரிசியைக் கொண்டு குஸ்கா பிரியாணி செய்து உண்பதால் உடலுக்கு பல வகைகளில் நன்மையைத் தரும். உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்ட சிறந்த நம் பாரம்பரிய தானியம் இந்த வரகு அரிசி.
உடல் பருமன், நீரிழிவு போன்ற பல தொந்தரவுகளுக்கு சிறந்த மாற்று இந்த வரகரிசி. வெள்ளை அரிசியில் அதிகப்படியான மாவு சத்துக்கள் உள்ளது. இந்த வரகரிசியில் மாவு சத்துக்களை விட அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த உணவு இந்த வரகு அரிசி குஸ்கா பிரியாணி.
மேலும் இந்த வரகரிசியை அடையாளம் காணவும், அதன் மருத்துவகுணங்கள், பயன்களை தெரிந்துக் கொள்ளவும் இங்கு இணையலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் வரகு அரிசி
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பிரியாணி இலை
- 2 ஏலக்காய்
- 1 பட்டை
- 4 கிராம்பு
- 2 நட்சத்திர சோம்பு
- ½ ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பச்சை மிளகாய்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 2 ஸ்பூன் நெய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- சிறிது புதினா இலை
- சிறிது கொத்தமல்லி தழை
- உப்பு
- 10 முந்திரி
செய்முறை
- வரகு அரிசியை இருபது நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.
- இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், புதினா இலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
- பின் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது மண்சட்டியில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து பொரிக்கவும்.
- பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லித்தழை விழுதை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு, தக்காளி சேர்த்து கிளறி நன்றாக வேகவிடவும்.
- தண்ணீரில் ஊறிய வரகரிசியை சேர்த்து இரண்டரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். (குழந்தைகளுக்கு தயாரிக்கும் பொழுது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம்.)
- நீர் நன்கு கொதிவந்ததும் சிறுதீயில் வைத்து ஏழு முதல் பத்து நிமிடம் வேகவிடவும்.
- இறுதியில் சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
- அடுப்பை அணைத்ததும் ஒரு பத்து நிமிடம் மூடியபடியே (தம்) விடவும். பின் எடுத்துக் கிளறி விடலாம்.
- பிறகு எடுத்துக் கிளறிவிட வரகு அரிசி பிரியாணி தயார்.
- அவ்வளவு தான் சுவையான சத்தான வரகரிசி குஸ்கா பிரியாணி தயார்.
வரகு குஸ்கா பிரியாணி
வெள்ளை அரிசிக்கு பதில் வரகரிசியைக் கொண்டு குஸ்கா பிரியாணி செய்து உண்பதால் உடலுக்கு பல வகைகளில் நன்மையைத் தரும். உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்ட சிறந்த நம் பாரம்பரிய தானியம் இந்த வரகு அரிசி. உடல் பருமன், நீரிழிவு போன்ற பல தொந்தரவுகளுக்கு சிறந்த மாற்று இந்த வரகரிசி. வெள்ளை அரிசியில் அதிகப்படியான மாவு சத்துக்கள் உள்ளது. இந்த வரகரிசியில் மாவு சத்துக்களை விட அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த உணவு இந்த வரகு அரிசி குஸ்கா பிரியாணி.