Kodiveli-herb-Kodiveli-Thailam

கொடிவேலி – நம் மூலிகை அறிவோம்

Plumbago Zeylanica; Ceylon Leadwort; கொடிவேலி

தமிழக கிராமப்புறங்கள் புதர்களில் பார்க்கப்படும் மூலிகைகளில் ஒன்று கொடி வேலி மூலிகை. இந்த செடியின் பூக்கள், இலைகள் சற்று வித்தியாசமாக மிக அழகாகவும் இருக்கும். இதன் இலைகள் தனியிலைகளாக அதன் விளிம்பில் பற்கள் போன்ற முனைகளும் இருக்கும். அதிலும் இந்த இளம் குருத்து இலைகள் சுருண்டு இருக்கும், பின் சற்று முற்றியப்பின் விரியும்.

Kodiveli-herb-Kodiveli-Thailam

இந்த கொடிவேலியின் பூக்கள் மூன்று நிறத்தில் அதன் மூன்று வகைகளைக் கொண்டிருக்கும். பூக்கள் வெள்ளை, சிவப்பு, நீலநிறத்திலிருக்கும். இவற்றில் வெள்ளை நிற பூக்கள் கொண்ட செடி எளிதாகப் பார்க்க முடியும். இந்த பூக்கள் சிறு கொத்துகளாகவும் காணப்படும். இதன் காய்கள் மேல் சுனையுடன் நீள் வட்ட வடிவில் இருக்கும். இந்த செடியின் வேர்ப்பகுதியே பயன்படும் பகுதியாகும். சித்திர மூலி, சித்தர் மூலம், கொடிவன்னி, அக்னி, கொடு வேலி. வன்னி, வசகம் என பல பெயர்கள் இந்த கொடிவேலிக்கு உண்டு.

பசித்தீத்தூண்டும் கொடிவேலி அஜீரணத்தைப் போக்கி உமிழ் நீரை சுரக்க வைக்கும், வியர்வையைப் பெருக்கும் தன்மையும் கொண்டது. உடலில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம் ஆகியவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும். மாத விலக்கைத் தூண்டும் ஆற்றல் கொண்டது, உடலுக்கு வெப்பந்தரும். மேகப் புண், நச்சுச் சுரம்மேலும், மூலம், குறிப்புண் ஆகியவற்றிற்கு சிறந்தது.

கொடிவேலி வேர்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கொடிவேலி வேரைக் கொண்டு குடிநீர் செய்து குடித்து வர மூலம், அஜீரணம், நச்சுச்சுரம், குறிப்புண், மேகப்புண், வீக்கம், புண், கட்டி போன்றவை நீங்கும்.

கொடிவேலி வேர்ப்பட்டை

இந்த கொடிவேலி வேர்ப்பட்டையுடன் சில மூலிகைகளையும் சேர்த்து உண்டு வர பக்கவாதம், மூலம், அஜீரணம், வலிப்பு நோய், மஞ்சட்காமாலை மற்றும் அனைத்து வாத நோய்களும் மறையும்.

கொடிவேலி தைலம்

ஐம்பது கிராம் அளவு கொடிவேலி வேரைப் பச்சையாக செடியிலிருந்து எடுத்து நன்கு பஞ்சுபோல நசுக்கி எடுத்து அதனை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டு காய்ச்ச வேண்டும். ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்துக் கொள்ளவும். இத்தைலத்தை 3 நாட்கள் தலையில் தேய்த்து குளித்து வர தும்மல், தீராத தலைவலி, பீனிசம், வாத நோய்கள் மறையும்.

(6 votes)