வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டி பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. அதிலும் தற்போது நச்சு கலந்த உணவு வகைகள், இயற்கையில் விளையும் பொருளை நேரடியாக உட்கொள்ள முடியாத நிலை, இது போன்ற பல காரணங்களால் வருவது தான் இந்த மூட்டுவலி.
வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்த காலத்தில் இளைஞர்களும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும்.
நாளடைவில் பெரிய நோயாக மாறும் இந்த மூட்டு வலிக்கு நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம் வலியை நிவாரணம் செய்யமுடியும். இந்த கரோட்டீன் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வெங்காயத்தில் அதிகப்படியாக உள்ளது.
அதே சமயம் எப்படி ஒருசில உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப் போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
முக்கியமாக யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை அதுவும் இன்று ராசயங்களை கொண்டு விளையும் ஹைபிரிட் தக்காளிகள் சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய தேதியில் முக்கிய வாத நோய்களில் ஒன்றானது ஆர்த்ரிடிஸ், இதனை கட்டுப்படுத்த எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், எந்த உணவுகளை உண்ண கூடாது என்று தெரிந்து கொள்வதே புத்திசாலித்தனம். அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.