இயற்கை உரம் தயாரிக்கும் முறை – மண்ணில்

மண்ணில் எவ்வாறு உரம் தயாரிப்பது என்று பார்ப்போம்

This image has an empty alt attribute; its file name is kitchen-waste-compost-easy-way-kitchen-waste-compost-in-tamil-iyarkai-uram-tayarippu-murai-veetu-kalivu-uram-kuppai-uram-vegetable-waste-fertilizer-organic-fertilizer-500x305.jpg

ஒன்று

நாம் செடிகளை வைக்க இருக்கும் நிலத்தில் அங்கங்கே சிறு சிறு குழிகளை தோண்ட வேண்டும். ஒவ்வொரு நாள் கழிவுகளையும் அதில் கொட்டி மண்ணை வைத்து நன்கு மூடிவிடவேண்டும்.

அல்லது

ஒரு ஓரத்தில் இரண்டு அல்லது மூன்றடி ஆழத்தில் இரண்டு மூன்றடி அகலத்தில் ஒரு பள்ளத்தை தோண்ட வேண்டும். அவற்றின் அடியில் கரும்பு சக்கை, பரப்பி அதன் மேல் கிடைக்கும் வீட்டுக்கழிவுகள், இலைதழை, புல், கோழி எரு, ஆட்டு புழுக்கை, வைக்கோல் போன்றவற்றை கொட்டி மண், மரத்தூள் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டே இருக்கவேண்டும். இதற்கும், சாணி தண்ணீர், சாணம், அரிசி தண்ணீர், மோர் போன்றவற்றை சேர்க்கலாம்.

காற்று, நீர் (ஈரப்பதம்) இவை இரண்டும் இருந்தால் மட்டுமே இந்த கழிவுகள் விரைவில் மக்கும். மக்குவது அல்லது மக்கு உரம் என்பது நுண்ணுயிர்களால் இயற்கையில் கிடைக்கும் அந்த பொருள் உருமாறுவது. சீரான காற்றோட்டம் இல்லையானால் இந்த கழிவுகள் மக்காமல் அழுகும். இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், பூச்சிகள், கொசுக்கள் வரும். அதேபோல் ஈரப்பதம் இல்லையானால் அவை உலர்ந்து போகும்  நுண்ணுர்கள் அதில் வாழ முடியாது. அதிக தண்ணீர் இருந்தாலும் அழுகிவிடும். இவற்றை சமன் செய்யவே வெங்காயம், பூண்டு போன்ற காய்ந்த தோல்களும், காய்ந்த இலைதழை சருகுகளும் சேர்க்கப்படுவதுடன் அவ்வப்பொழுது பிரட்டியும் விடவேண்டும். 

நிரப்பிய இந்த குழி நிரம்பியதும் நன்கு பிரட்டிவிட்டு அவ்வப்பொழுது நீருற்றி பராமரிக்க வேண்டும். ஒரு மாதத்தில் நன்கு மக்கிய உரம் தயாராகும். இதனை மண்ணில் இட்டு மண் கலவை தயாரித்து செடிகளையும் வைக்கலாம் அல்லது அவ்வப்பொழுது மற்ற செடிகளுக்கு இடலாம்.

உர தயாரிப்பு முறைகளில் கவனிக்கவேண்டியவை:

  • ஈரமாக இருக்கும் கழிவுகளும் அதற்கேற்ப காய்ந்த இலைதழைகள், காய்ந்த தோல்கள் அவசியம் தேவை. இவற்றை சாண்ட்விச் போல் ஒன்று மற்றொன்று என மாறிமாறி சேர்க்கவேண்டும்.
  • முடிந்தவரை சிறுசிறு துண்டுகளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 
  • வாழைப்பழம், டிகாஷன், முட்டையோடுகள், சாணி தூள் போன்றவற்றை சேர்க்க விரைவாக நல்ல பலன்கிடைக்கும்.

இந்த முறையை பின்பற்றி  நமது வீட்டு கழிவுகளை உரமாக்கி நமது செடிகளுக்கு எந்த செலவும் இல்லாமல் உரத்தையளிப்போம். நாம், நமது குடும்பம், நமது நாடு… குப்பைகளை பயனுள்ள உரமாக்குவதால் செழிக்கும். 

மேலும் இயற்கை உரம்
தொட்டியில் தயாரிக்கும் முறைஇயற்கை உரம்
இயற்கை உரம் – மாடித்தோட்டத்திற்கு தயாரிக்கும் முறை