கிச்சிலிச்சம்பா பிஸிபேளாபாத் / Kichili Samba Rice

சன்ன ரகமான இந்த பாரம்பரிய அரிசியினை விளைவிக்க எந்த இரசாயனமும், பூச்சி கொல்லியும் (Organic Rice) தேவையில்லை. பாரம்பரிய அரிசி என்பதால் இந்த கிச்சிலி சம்பா இயற்கையாகவே நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி விளையும் தன்மை கொண்டது. இயற்கையாக, இயற்கையான முறையில் விளையும் இந்த அரிசி உடலுக்கும் நமது உறுப்புகளுக்கும் எந்த தீங்கும் அளிக்காது பாதுகாக்கிறது. உடலுக்கும் மனதிற்கும் வலுவையும், தெம்பையும் அளிக்கும் அரிசியாகவும் இந்த பாரம்பரிய அரிசி உள்ளது. பட்டை தீட்டாத இந்த கிச்சிலி சம்பா அரிசியில் வைட்டமின், நார் சத்து, தாது உப்புக்கள் மற்றும் சிறு அளவில் புரதச்சத்தும் உள்ளது. இதுமட்டுமல்ல அன்று பால் சுரப்பிற்கு ஏற்ற அரிசியாகவும் இந்த அரிசி இருந்தது. அந்த காலங்களில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த அரிசி சோறு கொடுப்பது வழக்கமாக இருந்தது. 

மேலும் கிச்சிலி சம்பா அரிசியைப்பற்றி பல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்துக்கொள்ள – கிச்சிலி சம்பா

கிச்சிலி சம்பா அரிசியை சமைக்கும் முறையினையும் இந்த இணைப்பிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம் – கிச்சிலி சம்பா அரிசி சாதம் சமைக்கும் முறை.

பாரம்பரிய அரிசியில் வெள்ளை அரிசியான இந்த கிச்சிலி சம்பா பிசிபேளாபாத் சுவையான மதிய உணவு. அனைவரும் விரும்பும் சுவையில் சத்தான அரிசி உணவு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • ½ கப் துவரம் பருப்பு
  • 1 கப் காய் கலவை – முருங்கைக்காய், சின்ன வெங்காயம், அவரைக்காய், கேரட், பீன்ஸ், பட்டாணி, கத்தரிக்காய், வாழைக்காய்
  • 1 உருண்டை புளி
  • 1 ஸ்பூன் சாம்பார்பொடி

  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • கடுகு
  • பெருங்காயம்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் நெய்

வறுத்து பொடிக்க

  • 5 வரமிளகாய்
  • 2 ஸ்பூன் தனியா
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 3 ஸ்பூன் கொப்பரை தேங்காய்

செய்முறை

  • வறுத்து அரைக்கவேண்டியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 
  • துவரம் பருப்பை நன்கு குழையவேகவைத்துக்கொள்ளவும். 
  • கிச்சிலி சம்பா அரிசியை ஆறு கப் தண்ணீருடன் ஒரு மண்சட்டியில் வேகவிடவும். 

  • அரைவேக்காடு அரிசி வெந்ததும் அதில் நறுக்கிவைத்திருக்கும் காய்களையும் சேர்க்கவும்.
  • பின் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து புளியை கரைத்து ஊற்றவும். 
  • நன்கு கொதித்து புளிவாசனை போனபின் அதனுடன் வேகவைத்திருக்கும் பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • நன்கு குலைய வேகவைக்கவும்.
  • ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெந்த சாதத்தில் வறுத்து பொடித்தவற்றுடன் சேர்க்கவும்.

கிச்சிலிச்சம்பா பிஸிபேளாபாத்

பாரம்பரிய அரிசியில் வெள்ளை அரிசியான இந்த கிச்சிலி சம்பா பிசிபேளாபாத் சுவையான மதிய உணவு. அனைவரும் விரும்பும் சுவையில் சத்தான அரிசி உணவு.
ஆயத்த நேரம் : – 20 minutes
சமைக்கும் நேரம் : – 40 minutes
மொத்த நேரம் : – 1 hour
பரிமாறும் அளவு : – 2