கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சாதம்

சன்ன ரகமான இந்த பாரம்பரிய அரிசியினை விளைவிக்க (Organic Rice) எந்த இரசாயனமும், பூச்சிக்கொல்லியும் தேவையில்லை. பாரம்பரிய அரிசி என்பதால் இந்த கிச்சிலி சம்பா இயற்கையாகவே நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி விளையும் தன்மை கொண்டது. இயற்கையாக, இயற்கையான முறையில் விளையும் இந்த அரிசி உடலுக்கும் நமது உறுப்புகளுக்கும் எந்த தீங்கும் அளிக்காது பாதுகாக்கிறது. உடலுக்கும் மனதிற்கும் வலுவையும், தெம்பையும் அளிக்கும் அரிசியாகவும் இந்த பாரம்பரிய அரிசி உள்ளது. பட்டை தீட்டாத இந்த கிச்சிலி சம்பா அரிசியில் வைட்டமின், நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் சிறு அளவில் புரதச்சத்தும் உள்ளது. இதுமட்டுமல்ல குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உதவும் வகையில் பால் சுரப்பிற்கும் ஏற்ற அரிசியாகவும் இந்த அரிசி இருந்தது. அந்த காலங்களில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த அரிசி சோறு கொடுப்பது வழக்கமாக இருந்தது. 

மேலும் கிச்சிலி சம்பா அரிசியைப் பற்றி பல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்து கொள்ள – கிச்சிலி சம்பா

கிச்சிலி சம்பா அரிசியை சமைக்கும் முறையினையும் இந்த இணைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம் – கிச்சிலி சம்பா அரிசி சாதம் சமைக்கும் முறை.

கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருந்தாலும்  நெல்லிக்காய் சாதம் மிக பிரமாதமாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • 3 நெல்லிக்காய் (துருவியது )
  • 3 ஸ்பூன் செக்கு நல்லெண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 3 காய்ந்த மிளகாய்
  • சிறிது பெருங்காயம்
  • 1 பச்சை மிளகாய் (காரத்திற்கேற்ப)
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு 

செய்முறை

முதலில் ஒரு கப் அரிசியினை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கிச்சிலி சம்பா அரிசியை சமைக்கும் முறையை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

அந்த சாதத்துடன் சிறிது செக்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியில் செக்கு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு மாற்றம் துருவிய மூன்று நெல்லிக்காயை சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த கிச்சிலி சம்பா அரிசியையும் சேர்த்து கிளறவும். 

அவ்வளவு தான் சூடான சுவையான கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சாதம் தயார்.

கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சாதம்

கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருந்தாலும்  நெல்லிக்காய் சாதம் மிக பிரமாதமாக இருக்கும். 
ஆயத்த நேரம் : – 15 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 45 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சிலி சம்பா அரிசி
  • 3 நெல்லிக்காய் (துருவியது )
  • 3 ஸ்பூன் செக்கு நல்லெண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 3 காய்ந்த மிளகாய்
  • சிறிது பெருங்காயம்
  • 1 பச்சை மிளகாய் (காரத்திற்கேற்ப)
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு 

செய்முறை

  • முதலில் ஒரு கப் அரிசியினை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கிச்சிலி சம்பா அரிசியை சமைக்கும் முறையை வேறொரு பதிவில் பார்க்கலாம்.
  • அந்த சாதத்துடன் சிறிது செக்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியில் செக்கு நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  • அதனுடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு மாற்றம் துருவிய மூன்று நெல்லிக்காயை சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த கிச்சிலி சம்பா அரிசியையும் சேர்த்து கிளறவும். 
  • அவ்வளவு தான் சூடான சுவையான கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சாதம் தயார்.