சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த நம் சிறுதானியம் கேழ்வரகு / ராகி. இதனை அவ்வப்பொழுது உண்பதால் எலும்புகள் பலப்பெரும். வளரும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான திண்பண்டமாகவும் இது இருக்கும்.
தேவையான பொருட்கள்
- 2 கப் கேழ்வரகு மாவு
- 1 கப் பொட்டுக் கடலை மாவு
- சிறிது சீரகம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு செக்கு கடலை எண்ணெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் பொட்டுக் கடலை மாவு போட்டு சல்லடையால் சலித்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சிறிது சேர்த்து சூடாக்கி, சலித்து வைத்திருக்கும் மாவில் ஊற்றவும்.
- அதன் பின்னர் மாவில் சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
- கெட்டியாக பிசைந்த பிறகு, முறுக்கு உரலில் மாவு கொள்ளும் அளவிற்கு நிரப்பவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரலில் வைத்திருக்கும் மாவை எண்ணெயில் ஒரே வடிவ முறுக்குகளாக பிழியவும்.
- ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும்.
- வெந்ததும் எடுத்து வைக்கவும். கேழ்வரகு முறுக்கு தயார்.
கேழ்வரகு முறுக்கு

⏲️ ஆயத்த நேரம்
10 mins
⏲️ சமைக்கும் நேரம்
15 mins
🍴 பரிமாறும் அளவு
4
🍲 உணவு
நொறுக்கு தீனி