கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali

தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது இந்த கேழ்வரகு களி. இதனை கர்நாடகாவில் ராகி மொத்தே (Ragi mudde) என்பார்கள். பாரம்பரியமாக ராகி மாவை கரைத்து, புளிக்க வைத்து பின் வேகவைத்து தயாரிப்பார்கள். ஆனால் அவசர உலகில் இன்று இந்த பழக்கம் மறைந்துவிட்டது என்று சொல்லலாம். சிறுதானிய வகையை சேர்ந்த கேழ்வரகின் சத்துக்களை முழுமையாக பெறவேண்டுமானால் கேழ்வரகு மாவை புளிக்க வைத்து பின் களி செய்வதால் பெறலாம்.

மேலும் நம் முன்னோர் பக்குவப்படுத்திய கேழ்வரகு மாவை பக்குவமான முறையில் வேகவைத்து மீண்டும் புளிக்க வைத்து இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து, அதில் இருக்கும் நுண்ணுயிர்களை பல மடங்கு பெருகி, பல சத்துக்களை அதிகரித்து உண்ணக்கூடிய ஒரு உணவாகவும் இருந்தது. இவ்வாறு புளிக்க வைத்த இந்த கேழ்வரகு களி உருண்டைகளை காலையில் மோருடன் சேர்த்து கரைத்து உண்ணக்கூடிய முறையும் இருந்தது. அல்லது தயாரித்தப் பின் புளிக்க வைக்காமல் இதனுடன் கூட்டு, குழம்பு சேர்த்தும் சாப்பிடும் பழக்கமும்மிருந்தது.

இன்றோ புளிக்க வைக்கும் அதாவது நொதிக்க வைக்கும் ஒரு முறையே முற்றிலும் மறந்துபோய் விட்டது. அது ஏதோ தேவையில்லாத ஒன்றாக மாறிப் போய்விட்டது. நமது கேழ்வரகு மாவும், வேகவைத்த களியும் புளிப்பதால் அந்த உணவு எளிமையான செரிமானத்தை பெறுவதுடன் புரதங்கள், அமிலங்கள் உருமாறி உடலுக்கும், நமது குடலுக்கும் தேவையான பாக்டீரியாக்கள் உருவாகி நுண்ணூட்ட சத்துக்களை அள்ளிக்கொடுக்கிறது. இது பல நோய்களை விரட்டவும் உதவுகிறது. அதனால் இந்த புளிக்க வைக்கும் முறைய தவறவிடாமல் கடைப்பிடிப்பது நம் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.

கேழ்வரகு மாவும், வேகவைத்த களியும் புளிப்பதால் அந்த உணவு எளிமையான செரிமானத்தை பெறுவதுடன் புரதங்கள், அமிலங்கள் உருமாறி உடலுக்கும், நமது குடலுக்கும் தேவையான பாக்டீரியாக்கள் உருவாகி நுண்ணூட்ட சத்துக்களை அள்ளிக்கொடுக்கிறது. இது பல நோய்களை விரட்டவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

செய்முறை

  • இந்த கேழ்வரகு களி தயாரிக்க சாதாரண கேழ்வரகு மாவையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது முளைகட்டிய கேழ்வரகு மாவையும் எடுத்துக்கொள்ளலாம்
  • முதலில் கேழ்வரகு மாவை எடுத்துக்கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைத்துவிடவேண்டும்.
  • ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை கரைத்த இந்த மாவை நன்கு புளிக்க வைக்க வேண்டும்.

  • நன்கு புளித்த பின் அதனை எடுத்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும்.
  • கட்டி இல்லாமல் நன்கு கிளறி கொண்டே இருக்க மாவு நன்கு கெட்டியாக கெட்டியாக வெந்து தயாராகிவிடும்.
  • மாவு நன்றாக வெந்து விட்டதை சரிபார்த்த பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட வேண்டும்.

  • மறுமுறை புளிக்கவைக்காத இந்த களியை குழம்பு, கூட்டு, துவையல் சேர்த்து உண்ணலாம் மீதம் இருக்கக்கூடிய மாவை புளிக்க வைக்கலாம்.

  • மீதமிருக்கும் இந்த கேழ்வரகு களியை நன்கு ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மண் பானை நீரில் உருண்டைகளாக ஊறவிட வேண்டும்.
  • அவ்வளவுதான் இரண்டு நாட்கள் ஆனாலும் புளித்து நல்ல ஒரு சத்தான உணவாக அந்த கேழ்வரகு களி தயாராகிவிடும்.
  • அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அப்படியே குழம்பு, கூட்டு சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது கரைத்து தேவையான அளவு மோர், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து கேழ்வரகு கூழாகவும் பருகலாம்.
  • அவ்வளவுதான் கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ் தயார்.

கேழ்வரகு களி

(1 vote)



தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது இந்த கேழ்வரகு களி. இதனை கர்நாடகாவில் ராகி மொத்தே (Ragi mudde) என்பார்கள்.


⏲️ ஆயத்த நேரம்
15 mins

⏲️ சமைக்கும் நேரம்
15 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
களி


தேவையான பொருட்கள்
செய்முறை
  1. இந்த கேழ்வரகு களி தயாரிக்க சாதாரண கேழ்வரகு மாவையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது முளைகட்டிய கேழ்வரகு மாவையும் எடுத்துக்கொள்ளலாம்
  2. முதலில் கேழ்வரகு மாவை எடுத்துக்கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைத்துவிடவேண்டும்.
  3. ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை கரைத்த இந்த மாவை நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
  4. நன்கு புளித்த பின் அதனை எடுத்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும்.
  5. கட்டி இல்லாமல் நன்கு கிளறி கொண்டே இருக்க மாவு நன்கு கெட்டியாக கெட்டியாக வெந்து தயாராகிவிடும்.
  6. மாவு நன்றாக வெந்து விட்டதை சரிபார்த்த பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட வேண்டும்.
  7. மறுமுறை புளிக்கவைக்காத இந்த களியை குழம்பு, கூட்டு, துவையல் சேர்த்து உண்ணலாம் மீதம் இருக்கக்கூடிய மாவை புளிக்க வைக்கலாம்.
  8. மீதமிருக்கும் இந்த கேழ்வரகு களியை நன்கு ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மண் பானை நீரில் உருண்டைகளாக ஊறவிட வேண்டும்.
  9. அவ்வளவுதான் இரண்டு நாட்கள் ஆனாலும் புளித்து நல்ல ஒரு சத்தான உணவாக அந்த கேழ்வரகு களி தயாராகிவிடும்.
  10. அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அப்படியே குழம்பு, கூட்டு சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது கரைத்து தேவையான அளவு மோர், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து கேழ்வரகு கூழாகவும் பருகலாம்.
  11. அவ்வளவுதான் கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ் தயார்.

(1 vote)

1 thought on “கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali

Comments are closed.