ராகி இனிப்பு குழிப்பணியாரம்

சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் நிறைந்த தானியம் கேழ்வரகி / ராகி. பெண்கள், வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு அவசியமான தானியமாகவும் இது உள்ளது. பற்கள், எலும்புகளுக்கு வலுசேர்க்கும் சிறந்த உணவு. அவ்வப்பொழுது மாலைநேரம் இந்த கேழ்வரகு இனிப்பு பணியாரம் செய்து உட்கொள்ள உடல் ஆரோக்கியம் கூடும் மூட்டுவலி, முடக்குவாததிர்க்கும் நல்ல மருந்தாக இருக்கும்.

மேலும் கேழ்வரகைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு சத்துக்களும் பயன்களும்.

தேவையான பொருட்கள்

  • ½ ஸ்பூன் வெந்தயம்
  • 2 கப் வெல்லம்
  • சிறிது ஏலக்காய் தூள்
  • தேங்காய் எண்ணெய்

செய்முறை

தூயமல்லி புழுங்கல் அரிசி, வரகு அரிசி, உளுந்து, வெந்தயம் இவை நான்கையும் ஊற வைத்து, அரைத்து ராகி மாவை அதனுடன் கலந்து சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு நன்கு புளித்ததும் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 

அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவினை சிறு சிறு குழிகளில் ஊற்றவும்.

ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மறு பக்கம் திருப்பி வேகவிடவும்.

இந்த ராகி குழிப்பணியாரம் செய்ய காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக இருக்கும்.

ராகி இனிப்பு குழிப்பணியாரம்

சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் நிறைந்த தானியம் கேழ்வரகி / ராகி. பெண்கள், வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு அவசியமான தானியமாகவும் இது உள்ளது. பற்கள், எலும்புகளுக்கு வலுசேர்க்கும் சிறந்த உணவு. அவ்வப்பொழுது மாலைநேரம் இந்த கேழ்வரகு இனிப்பு பணியாரம் செய்து உட்கொள்ள உடல் ஆரோக்கியம் கூடும் மூட்டுவலி, முடக்குவாததிர்க்கும் நல்ல மருந்தாக இருக்கும்.
ஆயத்த நேரம் : – 10 hours
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 10 hours 15 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 1 கப் தூயமல்லி புழுங்கல் அரிசி
  • 1 கப் வரகு அரிசி
  • 1 கப் ராகி மாவு
  • 1 கப் உளுந்து
  • ½ ஸ்பூன் வெந்தயம்
  • 2 கப் வெல்லம்
  • சிறிது ஏலக்காய் தூள்
  • தேங்காய் எண்ணெய்

செய்முறை

  • தூயமல்லி புழுங்கல் அரிசி, வரகு அரிசி, உளுந்து, வெந்தயம் இவை நான்கையும் ஊற வைத்து, அரைத்து ராகி மாவை அதனுடன் கலந்து சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • மாவு நன்கு புளித்ததும் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 
  • அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவினை சிறு சிறு குழிகளில் ஊற்றவும்.
  • ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மறு பக்கம் திருப்பி வேகவிடவும்.
  • இந்த ராகி குழிப்பணியாரம் செய்ய காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக இருக்கும்.