ராகி இனிப்பு இடியாப்பம் சிறந்த சிற்றுண்டியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்றது. வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்கள், இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்தது. மிக எளிதாக இதனை வீட்டிலேயே தயாரித்து உண்ண சிறந்தது.
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ராகி மாவு
- 1/2 கப் இடியாப்பம் மாவு
- 1/4 கப் வெல்லம்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 ஸ்பூன் நெய்
- சிறிது ஏலக்காய் தூள்
- 2 ஸ்பூன் தேங்காய்ப்பால்
செய்முறை
- முதலில் ராகி மாவை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
- அதனுடன் இடியாப்பம் மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இவற்றுடன் தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும்.
- நீர் கொதித்த பின் அதனை மாவில் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
- பின் இந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து பத்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வேகவைத்த இடியாப்பத்தில் தேங்காய் பால், ஏலக்காய் தூள், நெய், தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- சுவையான சத்தான ராகி இடியாப்பம் தயார்.
ராகி இனிப்பு இடியாப்பம்