முளைக்கீரை, தண்டுக்கீரை, தண்டு கீரை வகைகள், அரைக்கீரை, சிறுகீரை, அறுகீரை வகைகள், குப்பைக்கீரை, தானிய கீரை, முள்ளுக்கீரை (களைகளாக வளர்பவை) என சாதாரணமாக பல வகை கீரைகளை அறிந்திருப்போம். இதில் முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை ஆகிய கீரைகள் வணிக ரீதியாக அதிகமாக பயிரிடப்படுகிறது. ஏனென்றால் இதை அனைவரும் வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பல கீரைகளை வகைப்படுத்தி தெரிந்துக்கொள்வோம்.
வாசனை கீரைகள்
- கருவேப்பிலை
- புதினா
- கொத்தமல்லி
- சதகுப்பை
கொடி வகை கீரைகள்
- தூதுவளை / சிங்கவல்லி
- முசுமுசுக்கை
- கொடிப்பசலை
- சிலோன் பசலை
- பிரண்டை
- முடக்கற்றான்
- சிறு குறிஞ்சான்
- பாகல் கீரை
- கோவைக்கீரை
களைகளாக வளரும் கீரைகள்
- மணத்தக்காளி
- பொன்னாங்கண்ணி
- கரிசலாங்கண்ணி
- சாரணை கீரை
- நீராரை / ஆராக்கீரை
- புளியாரை கீரை
- பண்ணைக் கீரை
- வல்லாரை
- குப்பைக் கீரை
- குமுட்டி கீரை
- சிறுகீரை
- நாய்க்கடுகு
- தும்பைக் கீரை
- அம்மான் பச்சரிசி
- மூக்கரட்டை கீரை
- புண்ணாக்கு கீரை
- துத்திக் கீரை
களைகளாக வளரும் கீரைகள் இன்னும் பல உள்ளது.
மர வகை கீரைகள்
மர வகை கீரைகளிலும் இன்னும் பல வகை கீரைகள் உள்ளன.