கவுனி அரிசி கஞ்சி / Kavuni Rice Porridge

பாரம்பரிய அரிசிகளில் கருப்பும் லேசான சிகப்பும் கலந்த கருப்பரிசி ராகம் இந்த கவுனி அரிசி. மற்ற அரிசிகளை வித தன்மைகளில் பல வேறுபாடுகள் கொண்ட ஒரு அற்புத அரிசி. அபரிவிதமான சத்துக்கள் நிறைந்த அரிசி.

மற்ற அரிசிகளைப் போல் இல்லாமல் பிசுபிசுப்பு தன்மை நிறைந்த அரிசியான இந்த கவுனி அரிசி இனிப்பு சுவையையும் ஒரு வித இனிப்பு இனிப்பு உணவினுடைய மணத்தையும் அளிக்கும் அரிசி. இன்று பல இடங்களில் பலதரப்பட கவுனி அரிசிகளை பார்க்கமுடியும். அவற்றில் அசல் கவுனி அரிசி முழுவதும் கருப்பாக இருக்காது எனபதை வாங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ளவேண்டும். அசல் கவுனிக்கே எண்ணிலடங்கா மருத்துவகுணங்களும், நோய் எதிர்ப்பு சத்தியும் நிறைந்துள்ளது. அசல் கவுனி அரிசி பொதுவாக இனிப்பு உணவுகளை மட்டுமே செய்ய உகந்தவை. காரணம் அதன் சுவையும், மணமும்..

தவிடு நீக்காத இந்த கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச்சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. உடல் பருமனுக்கு உகந்த அரிசி. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம். 

மேலும் கவுனி அரிசியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவகுணங்கள், பூர்வீகம் பற்றி தெரிந்துகொள்ள – கவுனி அரிசி.

This image has an empty alt attribute; its file name is chettinad-kavuni-rice-karup-1-500x374.jpg

தேவையான பொருட்கள்

  • ¼ கவுனி அரிசி
  • ¼ தேங்காய் பால்
  • உப்பு / நாட்டு சர்க்கரை

செய்முறை

  • கவுனி அரிசியை முதலில் இரண்டு மூன்று முறை அலசிவிட்டு ஆறு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக்கொண்டு அரிசியை மிக்ஸ்யில் ஓரளவு நைசாக உடைத்துக்கொள்ளவேண்டும்.
  • ஒரு மண்சட்டியில் ஒரு கப் நீர் விட்டு அதனுடன் உறவைத்த நீரையும் உடைத்த அரிசியையும் சேர்த்து வேக விட வேண்டும்.

  • அடிபிடிக்காதவாறு கரண்டியைக் கொண்டு அவ்வப்பொழுது கிண்டிவிட வேண்டும். நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
  • நன்கு கலந்து விட்டு சுவைக்கு ஏற்ப உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும். காலை உணவிற்கு ஏற்றது. உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள், கொழுப்பை அகற்ற உதவும் கஞ்சி.

கவுனி அரிசி கஞ்சி

(2 votes)



நீரிழிவு, உடல் பருமன், வாத நோய், சுண்ணாம்பு சத்து குறைபாடு, மூட்டு வலிக்கு சிறந்த அரிசி. இதனில் வாரம் ஒருமுறை கஞ்சி செய்து உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.


⏲️ ஆயத்த நேரம்
6 hrs

⏲️ சமைக்கும் நேரம்
30 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
கஞ்சி


தேவையான பொருட்கள்
  • ¼ கவுனி அரிசி
  • ¼ தேங்காய் பால்
  • உப்பு / நாட்டு சர்க்கரை
செய்முறை
  1. கவுனி அரிசியை முதலில் இரண்டு மூன்று முறை அலசிவிட்டு ஆறு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.
  2. பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக்கொண்டு அரிசியை மிக்ஸ்யில் ஓரளவு நைசாக உடைத்துக்கொள்ளவேண்டும்.
  3. ஒரு மண்சட்டியில் ஒரு கப் நீர் விட்டு அதனுடன் உறவைத்த நீரையும் உடைத்த அரிசியையும் சேர்த்து வேக விட வேண்டும்.
  4. அடிபிடிக்காதவாறு கரண்டியைக் கொண்டு அவ்வப்பொழுது கிண்டிவிட வேண்டும். நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
  5. நன்கு கலந்து விட்டு சுவைக்கு ஏற்ப உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும். காலை உணவிற்கு ஏற்றது. உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள், கொழுப்பை அகற்ற உதவும் கஞ்சி.

(2 votes)

3 thoughts on “கவுனி அரிசி கஞ்சி / Kavuni Rice Porridge

  1. Anu

    5 stars
    helps weight loss?

Comments are closed.