கவுனி அரிசி பயன்கள் / Kavuni Arisi Benefits

கவுனி அரிசி / கருப்பு கவுணி அரிசி / கவுணி அரிசி / செட்டிநாட்டு கவுனி

தவிடு நீக்காத கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீஸ், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச் சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.

கவுனி அரிசியின் மருத்துவ குணங்கள்

நீரிழிவு

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.

உடல் பருமன்

உடல் பருமனுக்கு ஒரு அற்புதமான உணவாகவும் மருந்தாகவும் இருக்கக் கூடிய அரிசி. உடல் பருமன் உள்ளவர்கள் இந்த கருப்பரிசி கவுனியில் கஞ்சி தயாரித்து அதாவது கவுனி அரிசி கஞ்சி செய்து பருக விரைவில் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுக்கள் தேவையில்லாத சதை நீங்கும்.

சுண்ணாம்பு சத்துக்கள்

ஒவ்வொரு கவுனி அரிசியையும் ஒரு கால்சியம் மாத்திரை என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம். 

புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் ‘அந்தோசயனின்’

தனிச்சிறப்பு இந்த அரிசியில் என்ன வென்றால் இதில் இருக்கும் ‘அந்தோசயனின்’. இந்த நிறமிச் சத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கட்டிகளை அகற்றுவதுடன், சிறுநீரகம், கல்லீரல், இதயத்தை பாதுகாக்க கூடியது. முக்கியமாக கேன்சரை அண்டவே விடாது.

மேலும் பல பயன்கள், நன்மைகள், பூர்வீகத்தை தெரிந்து கொள்ள கவுனி அரிசி பக்கத்தில் இணையவும்.

கவுனி அரிசியின் நன்மைகள்

  • உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்களைக் கொண்ட ஒரு அற்புதமான அரிசி.
  • புரதச்சத்துக்கள், மாவுச் சத்துக்கள், நார்ச்சத்துகள் அதுமட்டுமல்லாமல் இரும்புச் சத்துக்களும் அதிகமாக கொண்டது.
  • பசையத் தன்மை கொண்ட இந்தக் கருப்பு கவுனி அரிசியில் குளூட்டன் புரதம் கிடையாது.
  • கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புகளுக்கு பலத்தை அளிக்கக்கூடியது.

  • உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை எளிதாக வெளியேற்றக் கூடிய ஆற்றல் நிறைந்தது.
  • உடலின் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது.
  • நீரிழிவு நோய்க்கு சிறந்தது. ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கக் கூடியது.
  • புற்றுநோய் மாதிரியான தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்க கூடியது.
  • மூட்டு வலியை விரட்டும்.
  • பெண்களுக்கு ஏற்றது.
  • இதயத்தை பலப்படுத்தக் கூடியது.
  • கொழுப்புச் சத்துக்களை குறைக்கக்கூடியது.
  • சிறுநீரகத்தை பாதுகாக்க கூடியது.
  • வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கும்.
  • அதிகமாக நார்ச்சத்துக்களை கொண்டது.
  • பசியை தூண்டக் கூடியது.

  • ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது.
  • கருப்புக் கவுனியின் நிறமி சத்தான ஆன்தோசயனின் புற்றுநோயைத் தடுக்கக் கூடியது.
  • உடலுக்குத் தேவையான பிராண சக்தியை சீரான முறையில் உறுப்புகளுக்கு அளிக்கக் கூடியது.
  • கண்களுக்கு சிறந்தது.
  • உடல் பருமனுக்கு அற்புதமான ஒரு மருந்து. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் வாரம் ஒருமுறை இந்த அரிசியில் தயாரிக்கக்கூடிய கஞ்சியை உணவோடு எடுக்க விரைவில் உடல் பருமன் குறையும்.
https://youtu.be/LsEPpHCoenQ
(3 votes)