நீரிழிவு, உடல் பருமன், அஜீரணம், மலச்சிக்கல், உடல் உறுப்புகளில் ஏற்படும் பதிப்புகளுக்கு சிறந்த சூப். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது. மிகவும் எளிமையாக தயாரிக்கக் கூடியது.
அனைத்து சத்துக்களும் உடல் எளிமையாக உட்கிரகிக்கும் வண்ணம் இருக்கும் அற்புதமான உணவு இந்த காட்டுயானம் அரிசி சூப். நீரிழிவு உள்ளவர்கள் அவ்வப்பொழுது உட்கொள்ள விரைவில் நல்ல பல கிடைக்கும்.
மேலும் காட்டுயானம் அரிசியின் பயன்கள், நன்மைகள் தெரிந்துக்கொள்ள – காட்டுயானம் அரிசி.
காட்டுயானம் அரிசியின் சிறப்புகளை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும்.
தேவையான பொருட்கள்
- 1 ஸ்பூன் காட்டுயானம் அரிசி மாவு
- 1 தக்காளி
- 1 பூண்டு
- தேவைக்கேற்ப மிளகு
- 1 ஸ்பூன் நெய்
- சிறிது சீரகம்
- 3 கருவேப்பிலை
- சிறிது இந்துப்பு
செய்முறை
- முதலில் காட்டுயானம் அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் தக்காளி உரித்த பூண்டு பற்கள், மிளகு ஆகியவற்றை நன்றாக மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி சிறிது சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்த பின் அரைத்த தக்காளி மசாலாவை இதில் சேர்க்க வேண்டும்.
- இதனுடன் கரைத்து வைத்திருக்கும் காட்டுயானம் அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தேவைக்கேற்ப இரண்டு கப் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- தேவைக்கேற்ப சிறிது இந்துப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கொதித்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- சுவையான சத்தான காட்டுயானம் அரிசி தக்காளி சூப் தயார்.
காட்டுயானம் அரிசி தக்காளி சூப்