பாரம்பரிய அரிசிகளின் வகையில் சர்க்கரை வியாதிக்கு ஏற்ற அரிசி காட்டுயானம் அரிசி. ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களை பெற்ற இந்த அரிசியில் பலவகையான வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு மண்டலம் இந்த இளம் சிகப்பு மோட்டா ரக காட்டுயானம் அரிசியினை உண்ண நல்ல பலனைப் பெறலாம். காட்டுயானம் அரிசி சாதம் அல்லது காட்டுயானம் அவல் உணவினை அன்றாடம் உட்கொள்ள சிறந்த பலனைப் பெறலாம்.
எளிதாக ஜீரணிக்கக் கூடியது. விரைவில் தயாரித்து உட்கொள்ள நார்ச்சத்துக்கள், புரதம் உட்பட பல சத்துகள் கிடைக்கும். உடல் பருமன், நீரிழிவு, இரத்த சோகைக்கு சிறந்த உணவு.
தேவையான பொருட்கள்
- 1 கப் காட்டுயாணம் அரிசி அவல்
- ¼ கப் நாட்டுச்சர்க்கரை
- ¼ கப் தேங்காய் துருவல்
- 2 ஸ்பூன் நாட்டுப் பசு நெய்
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
செய்முறை
முதலில் சிகப்பு காட்டுயாணம் அவலினை 20 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.
பின் அதில் நாட்டுச்சர்க்கரை, தேங்காய்ப்பூ, பசு நெய், ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி உண்ணலாம்.
மாலை நேர சிற்றுண்டியாக இந்த உணவினை குழந்தைகள் முதல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வரை நன்கு மென்று சுவைத்து உண்ணலாம்.
காட்டுயாணம் அரிசி இனிப்பு அவல்
தேவையான பொருட்கள்
- 1 கப் காட்டுயாணம் அரிசி அவல்
- ¼ கப் நாட்டுச்சர்க்கரை
- ¼ கப் தேங்காய் துருவல்
- 2 ஸ்பூன் நாட்டுப் பசு நெய்
- 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
செய்முறை
- முதலில் சிகப்பு காட்டுயாணம் அவலினை 20 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.
- பின் அதில் நாட்டுச்சர்க்கரை, தேங்காய்ப்பூ, பசு நெய், ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி உண்ணலாம்.
- மாலை நேர சிற்றுண்டியாக இந்த உணவினை குழந்தைகள் முதல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வரை நன்கு மென்று சுவைத்து உண்ணலாம்.