Curcuma Aromatica; wild turmeric; கஸ்தூரி மஞ்சள்
பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் மூலிகைகளில் ஒன்று கஸ்தூரி மஞ்சள். நவநாகரீக யுகத்திலிருக்கும் பெண்களும் இதனை பயன்படுத்துவதுண்டு என்பதிலிருந்தே மஞ்சள் நமது பாரம்பரியத்தில் எந்தளவு பின்னிப் பிணைந்துள்ளது என தெரிந்துக் கொள்ளலாம். உலகளவில் திரும்புமிடமெல்லாம் அதிகமாக காணப்படும் சருமப் புற்றுநோய் நமது இந்தியப் பெண்களை பொதுவாகத் தாக்குவதில்லை. அதற்கு காரணம் நமது பெண்கள் பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சள்.
சருமத்தைக் கவசம் போல் பாதுகாக்கும் சிறந்த மூலிகை மட்டுமல்லாமல் சருமத்தில் ஏற்படும் நோய்கள், தொந்தரவுகள், சொறி, படை, புண்கள், வியர்வை துர்நாற்றம், வயிற்று வலி, அரிப்பு போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். அது மட்டுமல்லாமல் அறிவையும் ஆண்மையையும் அதிகரிக்கும் மூலிகையும் கூட இது. உடல் பலத்தை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளுக்கு காட்டு மஞ்சள் என்று ஒரு பெயரும் உள்ளது. கஸ்தூரி மஞ்சள் ஒரு சிறு செடிவகை மூலிகையாகும். இதன் இலைகள் இரண்டு வரிசைகளில் தனி இலைகளாக இருக்க அதுவே நறுமணமுடையதாகவும் உள்ளது. இதன் கிழங்கே பயன்படும் பகுதியாகும்.
ஆண்மை பெருக
இயற்கை முறையில் விளைந்த கஸ்தூரி மஞ்சள் கிழங்கை வாங்கி அதனை நன்கு காயவைத்து பின் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தூய்மையான கஸ்தூரி மஞ்சள் பொடியை தினமும் நீருடன் கலந்து அருந்தி வர வயிற்று வலி, வயிற்றுக் கோளாறுகள் நீங்கி, ஆண்மை பெருகும்.
தோல் நோய்கள், புண், வலி மறைய
கஸ்தூரி மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி உடலில் தேய்த்து வர தோல் நோய்கள், உடல் வலி, அடிபட்ட வலிகள், புண்கள் மறையும்.
கரப்பான், சொறி, சிரங்கு, படை தீர
கஸ்தூரி மஞ்சள் பொடியை தேய்த்துக் குளித்து வர மாந்தம், கரப்பான், நாட்பட்ட புண், சொறி, சிரங்கு, படை முதலியன தீரும்.
Very useful informations are given here.
thnks a lot.