கசகசா (Papaver somniferum)

நவீன உணவுகள், சத்தற்ற சக்கை உணவுகள், குளிர்சாதனைப் பெட்டி உணவுகள், பதப்படுத்திய உணவுகள், மாமிச உணவுகள் என்று பட்டையைக் கிளப்பும் மாடர்ன் மங்கைகளின் குடும்ப நலனுக்கு என்றும் ஏற்றது கசகசா.

கசகசா என்றதும் மசாலாக்களை நன்கு அரைத்து, கமகம என்று வாசனையை கிளப்பும் குழம்புகளும் க்ரேவிகளும் தான் நினைவிற்கு வரும். வாசனையையும் சுவையையும் கடந்து அவற்றில் இருப்பது அதனையும் சத்துக்கள். 

ஒன்றை பலவாக கூறுவது நாகரீகம். பலவற்றை எதார்த்தமாக ஒன்றாக்குவது தான் உண்மையான புரிதல். அந்த புரிதலின் காரணமாக அன்றாட உணவுகளில் ஏற்படும் நச்சுக்களையும் உபாதைகளையும் தடுக்க நம்மவர்கள் பயன்படுத்திய பல உணவுகளில் ஒன்று தான் கசகசாவும். 

poppy seeds’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது.

கால்சியம், இரும்பு, பொட்டாசியம் என்று பலசத்துக்களை கொண்டிருக்கும் நம்ம ஊரு கசகசாவுடன் பசும் பாலினை சேர்த்து மாதம் இரண்டு முறை அருந்த குழந்தைகளைத் தாக்கும் குடற்புழு நீங்கும். இன்றைய உணவுகளால் பெரிதும் கவரப்படும் குழந்தைகளை குடற் புழு எளிதில் தாக்குகிறது. பசியின்மை, இரத்தசோகையுடன் நோய் எதிர்ப்பு சக்தியற்ற குழந்தைகள் இந்த புழுக்களால் பெருமளவில் அவதியுறுகின்றனர். 

குடற்புழுக்கள்

சத்தற்ற சுகாதாரமற்ற பழைய உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகளின் உணவுக் குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் சென்று பெரிய புழுக்களாக உருமாறுகிறது.

இந்த புழுக்களால் குழந்தைகளின் உடல் நலன் மேலும் மேலும் மோசமடைகிறது. இந்த தொந்தரவிலிருந்தும் உடல் பலகினத்தில் இருந்தும் நம் குழந்தைகளைக் கசகசா காக்கிறது. இதனால் ஏற்படும் உடல் சூட்டினையும் நீக்கி உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.  

மாதம் இருமுறை முதல்நாள் இரவு சிறிது கசகசாவை ஊறவைத்து மறுநாள் அதனை அரைத்து பசும் பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்க இந்த குடற் புழுக்கள் உடலை விட்டு நீங்கிவிடும். மேலும் பெண்களும் இதனை அருந்த வெள்ளைப் படுத்தல், மாதவிடாய் வலிகள் நீங்கும். 

வாய் புண்கள்

சீரான செரிமானத்தை அளித்து வாயில் வரக்கூடிய புண், வயிற்றில் வரக்கூடிய புண் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்து இந்த கசகசா. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவிற்கு உட்பட்ட அளவையே உட்கொள்ளவேண்டும்.

தூக்கமின்மை, எலும்புகள் ஆரோக்கியம், மூளை செயல்பாட்டிற்கு சிறந்த பலனை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

மலச்சிக்கலை போகவள்ளது, இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

புற்றுநோய்க்கு மருந்தாகவும், வலிநிவரணத்தை அளிக்ககூடிய விதையாகவும் உள்ளது.

கசகசாவில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளை வழங்கக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டி, தோலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த உதவுகிறது. இவ்விதைகள் சருமத்தை சுத்தப்படுத்தி, தோலிற்கு பொலிவை வழங்க உதவுகின்றன.

எந்த ஒரு உணவுப்பொருளாக இருந்தாலும் தேர்ந்தெடுத்தல் என்பது மிகவும் அத்தியாவசியமானது. உணவு வகைகளை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்; கலப்படம் இல்லாத உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது ஆகும். கசகசாவை பொறுத்தவரை பல விதமான வகைகள் உள்ளன; இவை தந்தம் பழுப்பு, இலேசான கிரே முதல் அடர்ந்த கிரே, கருப்பு அல்லது நீலம் என பல நிறங்களில் வேறுபடும். இந்திய கசகசா வகை தந்தம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

அளவாக இதனை பயன்படுத்த சிறந்த மருந்தாகவும், உணவாகவும் இருக்கும். அதுவே அளவுக்கு மிஞ்சுகையில் இந்த கசகச பல உடல் உபாதைகளையும், மயக்கம், போதயையும் அளிக்கக்கூடியது. கவனமாக அளவோடு பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.