karuveppilai-kuzhambu-recipe-in-tamil-curry-leaves-gravy

கறிவேப்பிலை குழம்பு

ஒவ்வொரு சமையலிலும் சேர்த்து பின் வீணாக்கும் ஒரு இலை கருவேப்பிலை. நமக்கு தேவையான இரும்புசத்துக்கள் நிறைந்தது என்பாதால் இதனை அன்றாடம் நம் உணவுகளில் சேர்க்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார். இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை என்பதால் இதனை வாரம் ஒருமுறை இவ்வாறு கறிவேப்பிலை குழம்பு வைத்து உண்ண நல்ல பலன் கிடைக்கும். மிக எளிதாகவும் தயாரிக்கலாம். Curry leaves Kulambu English Recipe.

karuveppilai-kuzhambu-recipe-in-tamil-curry-leaves-gravy

தேவையான பொருட்கள்

  • கொழுந்து கறிவேப்பிலை. 2 கப்
  • வரமிளகாய் 4
  • 1 துண்டு கொடம்புளி
  • கல் உப்பு
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 ஸ்பூன் உபருப்பு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் உ பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • கொடம்புளியை கல் உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
  • பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொண்டு இறுதியில் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • வறுந்த சாமான்களையும் தேங்காய், வரமிளகாய், கொடம்புளி, உப்பு, கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • சற்று சுண்டிய எண்ணெய் பிரிந்தப்பின் இறக்க வேண்டும்.
  • சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அற்புதமான குழம்பு இந்த கருவேப்பிலை குழம்பு.
karuveppilai-kuzhambu-recipe-in-tamil-curry-leaves-gravy

கறிவேப்பிலை குழம்பு

ஒவ்வொரு சமையலிலும் சேர்த்து பின் வீணாக்கும் ஒரு இலை கருவேப்பிலை. நமக்கு தேவையான இரும்புசத்துக்கள் நிறைந்தது என்பாதால் இதனை அன்றாடம் நம் உணவுகளில் சேர்க்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார். இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை என்பதால் இதனை வாரம் ஒருமுறை இவ்வாறு குழம்பு வைத்து உண்ண நல்ல பலன் கிடைக்கும். மிக எளிதாகவும் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கொழுந்து கறிவேப்பிலை. 2 கப்
  • வரமிளகாய் 4
  • நெல்லிக்காய் அளவு புளி
  • கல் உப்பு
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 ஸ்பூன் உபருப்பு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • முதலில் உபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • புளியை கல் உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.
  • பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை வதக்கிக் கொண்டு இறுதியில் தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • வறுந்த சாமான்களையும் தேங்காய், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, உப்பு புளி கரைசலை ஊற்றி அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • சற்று சுண்டிய எண்ணெய் பிரிந்தப்பின் இறக்க வேண்டும்.
  • சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அற்புதமான குழம்பு இந்த கருவேப்பிலை குழம்பு.