karuvela maram benefits tamil, Gum arabic tree, Acacia Nilotica

கருவேல் மரம் – நம் மூலிகை அறிவோம்

Acacia Nilotica; Babul – Gum Tree; Gum arabic tree; கருவேல மரம்

கருவேல மரம் என்ற பெயர் நமக்கு தெரியுதோ இல்லையோ, ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழி தமிழகத்தை சேர்ந்த அனைவருக்குமே தெரியும். இதில் வரும் வேலும் என வேல மரத்தின் குச்சி என்பது கருவேல மரத்தையே குறிக்கிறது. தமிழகம் மற்றும் சில தெற்காசிய நாடுகளில் வளரும் மரம் இந்த கருவேல மரம். சீமைக்கருவேல மரம் என்ற ஒரு நச்சு மரம் நமது தமிழகத்தில் நாம் பார்த்திருப்போம். சமீபத்தில் இந்த மரத்தை வெட்டி அழிக்கவும் சட்டம் உள்ளது, அவ்வளவு விசத்தன்மை கொண்ட மரம் இந்த சீமைக்கருவேல மரம்.

karuvela maram benefits tamil, Gum arabic tree, Acacia Nilotica

நமது பாரம்பரிய மரமான கருவேல மரத்தை ஒத்திருப்பதால் இந்த அயல் நாட்டு மரத்திற்கு சீமை கருவேல மரம் என அழைக்கப்பட்டது. நமது நாட்டு மரமான கருவேல மரம் பல மருத்துவகுணங்களையும், பலனையும் கொண்டுள்ளது. பிசின் கொண்ட இந்த மரத்திற்கு கருவேலம், கண்டாலு என்றும் பெயருண்டு. இந்த கருவேல மரத்தின் இலைகள் கூட்டிலைகள் மற்றும் இந்த மரத்தில் முட்கள் இருக்கும், இலைகளில் காம்பின் அடியில் முட்கள் இருக்கும்.

இந்த கருவேல மரத்தின் பட்டை, கொழுந்து, இலை, வேர், பிசின், விதை அனைத்துமே பயன்படும் பகுதிகள். பற்களுக்கு உறுதியளிக்கும். சளிக்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும். உடலில் ஏற்படும் வறட்சியை அகற்றி, ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட இது உடலிலுள்ள உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் கொண்டது. நுரையீரல் நோய்களை நீக்கி, உடலுக்கு பலத்தையும், வலுவையும் அளிக்கும்.

பற்களுக்கு

கருவேலங்குச்சியைக்கொண்டு பல் தேய்க்க பற்கள் உறுதியாகும், கருவேல மரப்பட்டை பொடியையும் பயன்படுத்தலாம். இந்த பட்டைக் குடிநீரைகொண்டு வாய் கொப்பளிக்க பல்லாட்டம், வாய்ப்புண், பல் ஈறு வலிகள் நீங்கும்.

குடல்புண், ஆண்மையைப் பெருக

இரத்தப் போக்கு, குடல்புண், பேதி, எரிச்சல், இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு கருவேல மர பிசினைப் பொடி செய்து அன்றாடம் இரண்டு வேளை எடுத்து வர விரைவில் தீரும். மேலும் ஆண்மையைப் பெருக்கும். விந்தை கெட்டிப்படுத்தும்.

வெப்பம் மறைய

கருவேலம் கொழுந்தை நீர்விட்டு நன்கு அரைத்து மோரில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் குடித்துவர பிரமருந்தின் வீரியம், வெப்பம் மற்றும் கழிச்சல்கள் மறையும்.

மூலம், புண் ஆற

புண் ஆற கருவேலம் இலைகளை நீர்விட்டு அரைத்து புண்களுக்குக் கட்ட துர்நீர் வெளியேறி விரைவில் ஆறும். கருவேலம் இலையை நீர்விட்டு அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.

நீரிழிவு, காய்ச்சலுக்கு

மரப்பட்டை குடிநீரை காலை, மாலை அரை கப் அளவு உள்ளுக்குக் எடுத்து வர நீரிழிவு, காய்ச்சல், சீதக்கழிச்சல், வெப்பத்தினால் உண்டாகும் நோய்கள் மறையும்.

(2 votes)