கருப்பு உளுந்து வடை

தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலுக்கு பலத்தை அளிக்கும். மூட்டு வலி, உடல் வலிக்கு சிறந்தது. பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் சத்தான மாலை சிற்றுண்டி கருப்பு உளுந்து வடை. குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

  • 1 கப்  கருப்பு உளுந்தம் பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • சிறிதளவு இஞ்சி

  • சிறிதளவு பெருங்காயம்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு மல்லி
  • சிறிதளவு தட்டிய மிளகு
  • செக்கு கடலை எண்ணெய்

செய்முறை

தோல் சேர்ந்த கருப்பு உளுந்தம் பருப்பை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். 

பின் சிறிது பெருங்காயம் சேர்த்து பொங்க ஆட்டி தேவையான உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சிறிது, கருவேப்பிலை, மல்லி, தட்டிய மிளகு இவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.

வாணலியில் செக்கு கடலை எண்ணெயை காய வைத்துக் கொள்ளவும்.

ஒரு இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்துத் தட்டி வடைகளாக செய்து நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையை எண்ணெயில் போடவும். 

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும்.

சுவையான கருப்பு உளுந்து வடை தயார்.

மாவில் 1 மேஜைக் கரண்டி அரிசிமாவு கலந்து சுட்டால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கு சத்தான மாலை சிற்றுண்டி. குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்றது.

கருப்பு உளுந்து வடை

தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலுக்கு பலத்தை அளிக்கும். மூட்டு வலி, உடல் வலிக்கு சிறந்தது. பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் சத்தான மாலை சிற்றுண்டி. குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்றது.
ஆயத்த நேரம் : – 6 hours
சமைக்கும் நேரம் : – 15 minutes
பரிமாறும் அளவு : – 3

தேவையான பொருட்கள்

  • 1 கப்  கருப்பு உளுந்தம் பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • சிறிதளவு இஞ்சி
  • சிறிதளவு பெருங்காயம்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு மல்லி
  • சிறிதளவு தட்டிய மிளகு
  • செக்கு கடலை எண்ணெய்

செய்முறை

  • தோல் சேர்ந்த கருப்பு உளுந்தம் பருப்பை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். 
  • பின் சிறிது பெருங்காயம் சேர்த்து பொங்க ஆட்டி தேவையான உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சிறிது, கருவேப்பிலை, மல்லி, தட்டிய மிளகு இவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் செக்கு கடலை எண்ணெயை காய வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு இலையில் தண்ணீர் தடவி மாவில் சிறு உருண்டை எடுத்துத் தட்டி வடைகளாக செய்து நடுவில் ஒரு துவாரம் செய்து எண்ணெய் காய்ந்ததும் வடையை எண்ணெயில் போடவும். 
  • ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும்.
  • சுவையான கருப்பு உளுந்து வடை தயார்.
  • மாவில் 1 மேஜைக் கரண்டி அரிசிமாவு கலந்து சுட்டால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
  • பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கு சத்தான மாலை சிற்றுண்டி. குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்றது.