தவிடு நீக்காத இந்த கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச்சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம்.
மேலும் கவுனி அரிசியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவகுணங்கள், பூர்வீகம் பற்றி தெரிந்துகொள்ள – கவுனி அரிசி
தேவையான பொருட்கள்
- 1 கப் கவுனி அரிசி
- ¾ கப் நாட்டு சர்க்கரை / கருப்பட்டி
- 2 ஏலக்காய்
- 2 ஸ்பூன் பசு நெய்
- ½ கப் தேங்காய் துருவல்
செய்முறை
- கவுனி அரிசியை முதல்நாள் இரவு ஊறவைத்துக் கொள்ளவும்.
- ஊறிய அரிசியை வேகவைக்க வேண்டும்.
- சிறு தீயில் குறைந்தது 20 – 30 நிமிடம் வேகும்.
- வெந்த பின் அதனுடன் துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய், நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறலாம்.
- இவ்வளவு எளிதான இந்த கவுனி அரிசியை தயாரித்து உண்ண மீண்டும் மீண்டும் உண்ணத் தோன்றும்.
செட்டிநாட்டு இனிப்பு கவுனி அரிசி