கருப்பு கவுனி அரிசி அல்வா

தவிடு நீக்காத இந்த கருப்பு கவுனி அரிசியில் அபரிவிதமான இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச்சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் உள்ளது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தேவையாக அனைத்து சத்துக்களும் இந்த அரிசியில் உள்ளது. அளவோடு தொடர்ந்து இந்த அரிசியை உண்ண நல்ல பலன் கிடைக்கும்.

ஒவ்வொரு அரிசியையும் ஒரு கால்சியம் மருந்து என்று கூறும் அளவு அதில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களும் இந்த அரிசியே வரப்பிரசாதம். 

மேலும் கவுனி அரிசியைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவகுணங்கள், பூர்வீகம் பற்றி தெரிந்துகொள்ள – கவுனி அரிசி.

அவ்வப்பொழுது இந்த கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கக்கூடிய அல்வா தயாரித்து குழந்தைகள் முதல் அனைவரும் உட்கொள்ள உடலுக்கு தேவையான பல பல சத்துக்களைப் பெறலாம்.

This image has an empty alt attribute; its file name is chettinad-kavuni-rice-karup-1-500x374.jpg

கவுனி அரிசி அல்வா – தேவையான பொருட்கள்

  • 1 கப் கவுனி அரிசி மாவு
  • ¼ கப் பசு நெய்
  • 1 கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் (கருபட்டியும் சேர்க்கலாம் )
  • முந்திரி, திராட்சை, பாதாம்

கவுனி அரிசி அல்வா – செய்முறை

கவுனி அரிசியை முதலில் ஊறவைத்து மிக்ஸ்யில் உடைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் நெய்சேர்த்து அரைத்து வைத்திருக்கும் கவுனி அரிசி, கரைத்த கருப்பட்டி, தண்ணீர் சேர்த்து நன்கு கைவிடாமல் கிண்ட வேண்டும்.

நன்கு வாசனை வர வெந்தபின் நெய்சேர்த்து அடுப்பை அணைத்து வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

கருப்பு கவுனி அரிசி அல்வா

இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும், நார்ச்சத்துக்களும், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும், இருதய நோயினை போக்கக் கூடிய எண்ணெய் சத்துக்களும் அதிகம் கொண்ட அரிசி கவுனி அரிசி.
ஆயத்த நேரம் : – 2 hours
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 2 hours 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருப்பு கவுனி அரிசி மாவு
  • ¼ கப் பசு நெய்
  • 1 கப் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் (கருபட்டியும் சேர்க்கலாம் )
  • முந்திரி, திராட்சை, பாதாம்

செய்முறை

  • கவுனி அரிசியை முதலில் ஊறவைத்து மிக்ஸ்யில் உடைத்துக்கொள்ளவேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையைச் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
  • அதே வாணலியில் நெய்சேர்த்து அரைத்து வைத்திருக்கும் கவுனி அரிசி, கரைத்த கருப்பட்டி, தண்ணீர் சேர்த்து நன்கு கைவிடாமல் கிண்ட வேண்டும்.
  • நன்கு வாசனை வர வெந்தபின் நெய்சேர்த்து அடுப்பை அணைத்து வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
https://www.youtube.com/watch?v=fd6lqKKJ1JM